Tamilnadu

News January 8, 2026

திருவாரூர்: டாஸ்மாக் ஊழியர் போக்சோவில் கைது

image

குடவாசல் அருகே ஒரு அரசு மதுபான கடையில் வேலை பார்ப்பவர் மாறன் (52). இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை, தனது வீட்டுக்குள் அழைத்துள்ளார். அதன்பின் அந்த சிறுமிக்கு மாறன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாறனை கைது செய்துள்ளனர்.

News January 8, 2026

திருப்பூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யுங்கள். (SHARE)

News January 8, 2026

ஈரோட்டில் வேலை! அறிவித்தார் கலெக்டர்

image

ஈரோடு, அரசு பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சமையல் உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி அடைந்த பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும், இதற்கு 2026 ஜன.9-ம் தேதி நாளையே கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

அரியலூர்: பொங்கல் விழா குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழகத்தில் பொங்கல் திருநாள் ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சுத்தம், சுகாதாரம் பேணும் விதத்திலும் மற்றும் சமத்துவத்தை கடைப்பிடிக்கும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும் பொங்கல் திருவிழாவானது “சமத்துவ சுகாதார பொங்கல் விழா” ஜன.14 அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

தேனி: பொங்கல் பரிசு குறித்து கலெக்டர் NEW UPDATE..

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ரூ.3000 பணம் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். அதற்கான புகார் எண்களை தெரிந்து கொள்ள <>இங்கு கிளிக்<<>> செய்யவும்.

News January 8, 2026

தஞ்சாவூரில் வேலை வாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூரில் அமைந்துள்ள சரபோஜி கல்லூரியில் வருகின்ற சனிக்கிழமை (ஜனவரி 10) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8 மணியளவில் மன்னர் சரபோஜி கல்லூரியில் தனியார் துறையை சார்ந்த பல நிறுவனங்கள் வருகை புரிந்து நேர்காணல் மூலமாக நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வேலை தேடும் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

பொங்கல் பரிசு: கோவை கலெக்டர் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப்பணம் வழங்கும் நிகழ்வை இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து கோவையில் வடகோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் பவன்குமார், எம்.பி கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

News January 8, 2026

சென்னை: விஜய் ரசிகர்களுக்கு பணம் ரீபண்ட்!

image

நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பட தயாரிப்பு நிறுவனம் விரைவில் புதிய வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திரையங்குகளில் முதல் காட்சிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு இன்று (ஜன-8) பணம் திருப்பி அளிக்கப்படுகிறது என திரையங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News January 8, 2026

நெல்லை: +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

சேரன்மாதேவியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவரது மகள் ஸ்ரீவரகோமதி (17). இவர் சேரன்மாதேவியில் உள்ள அரசு பள்ளியில் 12வது படித்து வந்தார். மாணவி பள்ளிக்கு லீவ் போட்டு பெற்றோரை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் மாணவியை பள்ளிக்கு செல்ல கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் விசாரணை.

News January 8, 2026

கிருஷ்ணகிரி: அதிரடி ஆய்வில் அதிர்ச்சி!

image

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி தொழிலாளர் துறை அலுவலர்கள் தேன்கனிக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கொங்குசெட்டுப்பள்ளி, நர்சரி பண்ணையில் பணிக்கு அமர்த்தப்பட்ட 16 வயது சிறுவனை மீட்டனர். பின்னர் சிறுவன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டான். இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!