Tamilnadu

News January 8, 2026

கோவை: போதை இளைஞர் அலப்பறை! அதிரடி ஆக்‌ஷன்

image

கோவை, பீளமேட்டில் நேற்று முன்தினம் கார் மீது ஏறி சிகரெட் பிடித்து ரகளை செய்த கேரளாவைச் சேர்ந்த அந்தோணி மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டரிடம் தவறாக பேசியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

News January 8, 2026

நீலகிரி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

நீலகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 0423-2443962 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 8, 2026

கரூர்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

கரூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04324-225100 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 8, 2026

செங்கல்பட்டில் 52,666 பெண்கள் ஏமாற்றம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட 54,810 பேரில், 2,144 பேருக்கு மட்டும் பணம் வழங்கியதால், 52,666 மகளிர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின், மீதமுள்ள குடும்பத் தலைவியரின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்படும். என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

News January 8, 2026

ஜன.12 திருக்குறள் வார விழா……….

image

திருக்குறள் வார விழாவை முன்னிட்டு, 2026 ஜனவரி 12 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறுகின்றன. முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இப்போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

News January 8, 2026

மதுரை: வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

image

மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்­த­வர் டீ மாஸ்­ட­ர் பாபு (57). இவர் மனைவியை பிரிந்து தனி­யாக வசித்து வந்­தார். இவ­ர் காச நோயால் பாதிக்­கப்­பட்டிருந்தார். இவர் வீட்­டில்­ இ­ருந்து 2 நாட்­களாக வெளியே வராததால் அக்­கம்­ பக்­கத்­தி­னர் போலீசுக்கு தெரி­வித்­த­னர். அவர்­கள் வந்து பார்த்­த போது அழுகிய நிலை­யில் பாபு இறந்து கிடந்­தார். சுப்­பி­ர­ம­ணி­ய­பு­ரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 8, 2026

தேனி: ஆந்திரா இளைஞரிடம் ரூ.25 லட்சம் மோசடி…

image

குள்ளபுரத்தை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது நண்பர் ஆந்திராவைச் சார்ந்த சீனு டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கிருஷ்ணன், பிச்சைமணி இருவரும் சேர்ந்து ராயப்பன்பட்டியைச் சேர்ந்த மாதவனை, சீனுவிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். இதையடுத்து சீனுவிடம் மாதவன் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து மாதவன் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News January 8, 2026

மயிலாடுதுறை: புகார் எண்கள் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், வருகிற ஜன.9, 10 தேதிகளில் கனமழை பெய்ய கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புகார் எண்கள் வெளியிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04364-222588 கட்டணமில்லா தொலைபேசி எண் 04364-1077, மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மயிலாடுதுறை (04364-252218, 9498482319), சீர்காழி (04364-279301, 9445854006) என்ற எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

News January 8, 2026

தி.மலை மக்களுக்கு பொங்கல் பரிசு !

image

திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்டவலம் அடுத்த கீரனூர் ஊராட்சி ராஜபாளையம் கிராமத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தை மாத பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான கூப்பன், ரேஷன் கடை கூட்டுறவு விற்பனையாளரால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம்.

News January 8, 2026

திருப்பூரில் மின்சாரம் தாக்கி பெண் பலி

image

திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலாமணி (55). இவர் வீட்டில் இருந்தபோது ஹீட்டர் மூலமாக வெந்நீரை சுட வைத்ததாக தெரிகிறது. அப்போது சுவிட்சை ஆப் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கலாமணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!