Tamilnadu

News January 8, 2026

தென்காசி: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீசில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 8, 2026

சிவகங்கை: இடம் வாங்க ரூ.5 லட்சம் பெறலாம் – APPLY

image

சிவகங்கை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் உள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது சிவகங்கை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

News January 8, 2026

வடமதுரை அருகே வசமாக சிக்கிய இளைஞர்கள்!

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (70). இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை, திருடிச் சென்றனர். இதனையடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் RVS நகரைச் சேர்ந்த வினோத் (28) மற்றும் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த அஸ்கர் மீரான் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து
ஆட்டை மீட்டனர்.

News January 8, 2026

தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

கரூரில் பொங்கல் பரிசு ரூ.3,000; முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் வாழும் 3,32,985 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ. 3,000, அரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்பட ஆரம்பித்துள்ளன. அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், கரூர், புகலூர் உள்ளிட்ட பகுதிகளில், எந்தவொரு புகார்களுக்கும் 1967 (அ) 1800-425-5901 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News January 8, 2026

சேலம் கோட்டம் சார்பில் 750 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

image

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை முதல் ஜனவரி 19-ம் தேதி வரை 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கோட்டம் சார்பில், சென்னை (கிளாம்பாக்கம்), பெங்களூரு, ஓசூர் மற்றும் கோவை ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

திருவள்ளூர் வருகிறார் மு.க.ஸ்டாலின்!

image

திருவள்ளூர்: பாடியநல்லூரில் நேற்று(ஜன.7) இரவு 11:00 மணி அளவில் எதிர்வரும் ஜனவரி 9 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள “உங்கள் கனவுகளை சொல்லுங்கள்” நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வர் பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ள இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் நேரில் பார்வையிட்டனர்.

News January 8, 2026

புயல் சின்னம்: நாகைக்கு கனமழை எச்சரிக்கை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.8) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோல வரும் ஜன.9-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 8, 2026

தென்காசி: பூச்சி மருந்து குடித்து தற்கொலை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ் (45). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து இன்று உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!