Tamilnadu

News January 8, 2026

விழுப்புரம்: சீறி பாய்ந்த பைக் – கடைசியில் TWIST!

image

விழுப்புரம் மேற்கு போலீசார், நான்குமுனை சிக்னல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் தக்கா தெருவை சேர்ந்த ஷாருக், (22) மற்றும் அருளவாடியை சேர்ந்த ராஜி (25) ஆகியோர் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் பைக்குகளில் அதிவேகமாக ஓட்டி வந்தது தெரியவந்தது. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து ஷாருக், ராஜியை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

News January 8, 2026

மெரினா அருகே தலைகுப்புற கவிழ்ந்த கார்

image

சென்னை காமராஜர் சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நேற்று தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அவ்வழியாக சென்ற 2 இருசக்கர வாகனம் 1 கார் விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும், விபத்து ஏற்படுத்திய ஒட்டுநர் தப்பி சென்ற நிலையில், மெரினா போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய திறனறித் தேர்வு

image

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி சனிக்கிழமை அன்று 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு நடைபெற உள்ளது. 18 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 907 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித் துறையும் செய்துள்ளன.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தகவல்!

image

போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், ரப்பர், டயர் போன்ற பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் பாதிப்பு ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 8, 2026

அரியலூர்: 614 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து

image

அரியலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மோட்டார் வாகன சட்டம் விதிமீறல் குற்றத்திற்காக 2,38,165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கிய குற்றத்திற்காக 4384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாகவும் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள் 614 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 8, 2026

புதுச்சேரி ஜிப்மருக்கு தேசிய அளவில் விருது

image

இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கும் 2024–2025 ஆம் ஆண்டிற்கான ‘காயகல்ப்’ விருது திட்டத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதற்காக ஜிப்மருக்கு ரூ.40 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை, சுகாதாரம் மற்றும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கியதற்கான இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

நாமக்கல்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை!

image

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

News January 8, 2026

தருமபுரி கலெக்டர் அறிவித்தார்!

image

தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 09.01.2026-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!