India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களிடம் துரை தயாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 அன்று நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை உட்பட தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட 12 வகையான ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன்(60). நேற்று(ஏப்.1) இவர் பெரியபள்ளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒற்றை யானை திடீரென தாக்கியதில், அங்கேயே படுகாயம் அடைந்து மாதையன் உயிரிழந்துள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஒகேனக்கல் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வரும் மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி ஏப்.,9 ஆம் தேதி பெரம்பலூர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பேச உள்ளதாக கோவை பாஜக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திண்டிவனம் அடுத்த பாதிரி ஏரிக்கரையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கழுத்தில் காயங்களுடன் கிடப்பதாக நேற்று (ஏப்.1) ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை (ஏப்ரல் 2) வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பணி மேற்கொள்வது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல் 2) நடைபெற்றது. இதில் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்துகொண்டார்.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை சென்று கொண்டிருந்த இரயில் இனி திருவண்ணாமலை வரை வந்து செல்லும் என்று திருச்சி பிரிவு தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மாலை 6.00 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் இரயில் இரவு 12.05 க்கு வேலூர், ஆரணி வழியாக திருவண்ணாமலை வந்து சேரும். காலை 3.45 க்கு புறப்பட்டு காலை 9.05 க்கு ஆரணி, வேலூர் வழியாக சென்னை வந்தடையும்.
கோவில்பட்டி விநாயகர் நகரை சேர்ந்த நில புரோக்கர் துரை. நேற்று இவர் எட்டையாபுரம் குமார கிரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி எம்பி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருசை ஆதரித்து திருநெல்வேலி தட்சின மாற நாடார் சங்க நிர்வாகிகளிடம் தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (ஏப்ரல் 2) ஆதரவு கேட்டு கலந்துரையாடினார். தொடர்ந்து அவர் சங்க நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல், நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், வணிகர்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசை அகற்றுவதற்கான தேர்தல் ஆகும் என்றார்.
Sorry, no posts matched your criteria.