India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம்: கண்டம்பாக்கம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை அடையாளம் தெரியாத பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்த தகவல் கிடைத்த உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை-மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மோதி பலியானது தெரியவந்தது. பின்னர், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரும்பாக்கம் விநாயகபுரத்தில் வசிப்பவர் சீனிவாசன் (50). இவர் 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, வீட்டில் அமுதாவை கத்தியால் குத்தி படுகொலை செய்து தீ வைத்து எரித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொடூரத்தை அரங்கேற்றியது டீ கடையில் வேலை பார்க்கும் சாந்தகுமார் (28) என்பது தெரியவந்தது.

ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் கிராமம் கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

பிச்சனூரை சேர்ந்த லாரி டிரைவர் திலீப்குமார், மனைவி சத்யா (24). இவரின் அண்ணன் சத்தியமூர்த்தி (28). இவர்களின் தாயாருக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாயரை சந்திக்க சென்ற சத்யா வீட்டில் பாகம் கேட்க செல்கிறார் என நினைத்த சத்தியமூர்த்தி நேற்று முன்தினம் (டிச.7) சத்யாவை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டினார். இதையடுத்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்திய மூர்த்தியை கைது செய்தனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு அருள்மொழி (1½) என்ற ஆண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் ஜன.11-ம் தேதி, ‘நாகப்பட்டினம் வரலாற்று பயணம்’ எனும் தலைப்பில் நாகை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டள்ளது. இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து 2,000 சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் 4 நாள்களுக்கு இயக்கப்படவுள்ளது. வரும் 12, 13, 14, 15ம் தேதியில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்பதால், வழக்கம் போல் கோவில் வழியில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. (ஷேர் பண்ணுங்க)

கள்ளக்குறிச்சி: புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் நவீன்குமார் (27). இவருடைய மனைவி ரோஷினி (20). இவர்களுக்கு ரெக்சன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ரோஷினி, நவீனுடனான கருத்து வேறுபாட்டால் தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு நவீன் சென்று அழைத்தபோது ரோஷினி மறுத்ததால், மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா பௌலின். இவர் வரலட்சுமி என்பவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் இல்லாத நிலத்தை ரூ.5.50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்த வரலட்சுமி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்டெல்லா பௌலீனுக்கு மூன்று ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா பௌலின். இவர் வரலட்சுமி என்பவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் இல்லாத நிலத்தை ரூ.5.50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்த வரலட்சுமி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்டெல்லா பௌலீனுக்கு மூன்று ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Sorry, no posts matched your criteria.