Tamilnadu

News January 9, 2026

ஈரோடு அருகே இளைஞர் சம்பவயிடத்திலே பலி

image

ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சாயத் தொழிற்சாலையில் பவானியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் வர்ணம் பூசும் பணியில் இருந்தார். சிமெண்ட் அட்டையின் மீது நின்று வர்ணம் பூசி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்வு இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 9, 2026

செங்கல்பட்டில் பரபரப்பு!

image

செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது தளத்திலிருந்து விழுந்து சிறுவன் நவீன் பலியானார். படுக்கையறை ஜன்னலில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததால், சோபாவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்தது விசாரணையில் தெரியவந்தது. கட்டுமான நிறுவனத்தின் அஜாக்கிரதையே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

News January 9, 2026

திருவள்ளூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை-தந்தை,மகனுக்கு சிறை!

image

திருவள்ளூரைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கடந்த 2021-ல், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (56) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட சிறுமியின் தாயாரை, முருகனின் மகன் ராஜ்குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி முருகனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் தண்டையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2026

தி.மலையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

image

ஆரணி அருகே தச்சூரில் கூலித் தொழிலாளி ரகுநாத்தின் மனைவி பிரியதர்ஷினி, இவர்களுக்கு 2வது குழந்தை பிறந்து 15 நாட்களே ஆகிறது. இந்நிலையில் பிரியதர்ஷினி குழந்தைக்கு பால் புகட்டிவிட்டு தூங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்துப் பார்த்தபோது, குழந்தையின் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 9, 2026

கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

image

சிதம்பரம் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கபிலன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி அடிக்கடி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதில் சிறுமி கருவுற்ற நிலையில், அவரது பெற்றோர் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கபிலன் மீது போக்சோ வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

News January 9, 2026

சிவகங்கை: விளையாட்டு திருவிழா-2026; முன்பதிவு முக்கியம்

image

சிவகங்கை மாவட்டத்தில், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா 2026 விளையாட்டு போட்டிகளில், வீரர்கள்/வீராங்கனைகள் பங்கேற்பதற்கு வரும் 21.1.2026 ம் தேதிக்குள் குறிப்பிட்ட <>-1https://sdat.tn.gov.in<<>> இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

BREAKING: நீலகிரிக்கு எச்சரிக்கை

image

தமிழகத்தின் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை கடும் உறைபனி நிலவரம் என IMD கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)

News January 9, 2026

புதுக்கோட்டை: மர்மாமன முறையில் விவசாயி பலி

image

ஆலங்குடி அருகே நகரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமாராசாமி ராஜா(48). இவர் தனது தோட்டத்தில் மருந்தடிக்க நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவிலை என, அவரது உறவினர்கள் சென்ற பார்த்தபோது, அவர் ரத்தகரையுடம் இறந்து கிடந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கீரமங்கலம் போலீசார் அவரது உடலை கைபற்றி கொலையா அல்லது தற்கொலை என விசாராணை மேற்கொண்டுள்ளனர்.

News January 9, 2026

குமரி: மாணவி குளிப்பதை படம் பிடிக்க முயன்ற தொழிலதிபர்.!

image

மிடாலம் பகுதி 15 வயது +1 மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். கடந்தமாதம்  மாணவி வீட்டு குளியலறையில் குளிக்கும்போது அப்பகுதி தொழிலதிபர் கில்பர்ட்(49) மறைந்து நின்று செல்போனில் படம் எடுக்க முயலவும் மாணவி செல்போனை பிடுங்கினார்.மாணவி சத்தம் போடவே  கில்பர்ட் தப்பி ஓடினார். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் நேற்று(ஜன.8) போக்சோ சட்டத்தில்  கில்பர்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்

News January 9, 2026

தஞ்சாவூர்: செத்து மிதந்த மீன்கள்

image

கும்பகோணம், அகராத்தூரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தனக்கு சொந்த இடத்தில் மீன்குட்டை அமைத்து மீன்கள் வளர்த்து வருகிறார். மீன்கள் அனைத்தும் தற்போது வளர்ந்து விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் அவர் குளத்திற்கு சென்ற போது, குளத்தில் மீன்கள் அனைத்தும் செத்து மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!