India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து ஏராளமான டாரஸ் லாரிகள் மணல் கற்கள் ஏற்றி சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று, பழனியப்பபுரத்திலிருந்து பேய்குளம் வரும் சாலையில் பழனியப்பபுரம் ஊருக்கு அருகே டாரஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த டிரைவர் மற்றும் பயணிகள் காயமின்றி தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றியவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேருக்கு, சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் பதவி உயர்வு பெற்ற 27 ஏட்டுகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை 4 வழி சாலை அமைக்கும் பணிகள், கடந்த சில வருடங்களாகவே நடைபெற்று வருகின்றன. எந்த நிலையில் நூற்றுக்கு ஏற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர். ஐந்து மாத சம்பளம் வழங்கப்படாத காரணத்தால், கோவை உடுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அந்தியூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் ஜன.14-ம் தேதி பொங்கல் தினத்தன்று, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் பொது மக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம் பெரியசாமி மனைவி ராக்கம்மாள்(25) காய்கறி கடையில் வேலை பார்த்தார். மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் தகராறு செய்ய அதில் கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு மனைவி சென்று விட்டார். நேற்று செம்பூரணி ரோட்டில் உள்ள ரேசன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்க அவர் வர, அங்கு வந்து மனைவியை அழைத்து சென்று கத்தியால் சரமாரியாக குத்திய கணவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் 42 கடைகள், மீன்வளத்துறையின் கீழ் செயல்படும் 11 கடையில், மகளிர் கடைகள் உட்பட மொத்தம் 443 நியாய விலை கடைகள் வாயிலாக பயன்பாட்டில் உள்ள 2,87,390 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.89.49 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (ஜன.8) அரியலூர் வருவாய்த் துறைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 5 புதிய வாகனங்களை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் நகர மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், ஆக்கூர், பொறையாறு, திருவிளையாட்டம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில், உளுந்து விதை உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதை மற்றும் உயிர் உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் நகல், நில ஆவண நகல்களை கொடுத்து, உளுந்து விதை மானியத்தில் பெறலாம் என செம்பனார்கோயில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், ஹரிகேசவநல்லூரை சேர்ந்தவர் மலையாண்டி இவரது மனைவி பேராட்சி வயது 65. இவர் உடல்நல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல் நலமாகாததால் மன உளைச்சலில் இருந்த பேராட்சி நேற்று திடீரென விஷம் குடித்து மயங்கினார். பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

தென்காசி, பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 1வது நடைமேடையில் நடந்து சென்ற பாவூர்சத்திரம் தெற்கு காந்தி நகரை சேர்ந்த ரத்தினசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 35 கிராம் தங்கச் முறுக்கு செயினை பறித்து சென்றனர். செயின் பறித்து தலைமறைவாக இருந்த பாவூர்சத்திரம் சின்னத்தம்பி நாடார் பட்டியை சேர்ந்த சிவா என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.