India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரக்கோணம் அருகே போலிப்பாக்கம் பகுதியில் நேற்று (ஜன.8) பயணிகளை ஏற்ற நின்றிருந்த ஆட்டோ மீது கட்டுப்பாட்டை இழந்த கிரேன் மோதியது. இதனால் ஆட்டோ அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூரை சேர்த்த மணிகண்டன்(24), தங்கமணி(24) ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் உள்ள காப்பர் கம்பிகளை தொடர்ந்து திருடி வந்ததால் கந்தர்வகோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதி விவசாயிகள் அளித்த புகாரின்படி, கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிலோ காப்பரை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிம் பணம் கொடுத்தால், நகையை அடமானம் வைத்து அசல், வட்டியைத் தருவதாகக் கூறி, போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரூ.1.35 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதை நம்பி பணத்தைக் கொடுத்த சீனிவாசன் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்து அவரளித்த புகாரின் படி, தஞ்சாவூர் மாவட்ட போலீசார் திருநெல்வேலி சேர்ந்த சக்திவிஜய், மகாராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தளி வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி மாது (38), மது பழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த 1-ம் தேதி மது போதையில் தவறுதலாக திராவகத்தை (ஆசிட்) குடித்த அவர், மயங்கி விழுந்தார். உறவினர்களால் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியாக வசித்த 25 வயது பெண்ணுக்கு, உதவி செய்வது போல் ஆசை காட்டி முகமது அலி, இம்ரான் உள்ளிட்ட நால்வர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஐந்து மாத கர்ப்பமான அப்பெண் அளித்த புகாரின் பேரில், நான்கு பேரையும் வந்தவாசி போலீசார் கைது செய்தனர். வறுமையைச் சாதகமாக்கி இழைக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் நாளை ஜன.10 அன்று மிக கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

திருவள்ளூர் பகுதியில், குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக கூறி 15 பேரிடம் ரூ.2.12 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு-க்கு (CCB) ஒரு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்து வந்த சாரா ஜோஸ்பின் பியூலா, கார்த்திகேயன், தினகரன், சித்ரா ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஜன.10) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காஞ்சி மாவட்டத்திற்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே நாளை வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் ஜன.17-ம் தேதி (சனிக்கிழமை) கோடியக்கரைக்கு ஒரு நாள் இயற்கை அனுபவ சுற்றுலா அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக நபருக்கு ரூ.900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.11-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 7395889645 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. எனவே இதில் விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் <
Sorry, no posts matched your criteria.