Tamilnadu

News January 9, 2026

புதுவை: ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா?

image

புதுவை பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம், சாதி, மண்டல அடிப்படையில் தேர்வுச் செய்யப்படும் 125 மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் ரூ.12,000 உதவித்தொகையாக வழங்கும். இதற்கு <>schooledn.py.gov.in<<>> மூலம் விண்ணப்பிக்கலாம்.” என கூறியுள்ளார்.

News January 9, 2026

அரியலூர் மாவட்டத்தில் 200 போக்சோ வழக்குகள் பதிவு!

image

அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ் கடந்த ஆண்டு 200 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 43 பெண்கள் உள்பட 294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குழந்தை திருமணத்தால் நடந்த போக்சோ குற்றத்திற்காக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

அறிவித்தார் திண்டுக்கல் ஆட்சியர்!

image

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in /  https://cmyouthfestival.sdat.in –இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் விவரங்களை பதிவு செய்திட வேண்டும். ஜன-7 முதல்  21-க்குள் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தகவல்.

News January 9, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கலை விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு: இக்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி (தலைமை ஆசிரியர்) என்பவரை 94423-93084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தென்காசி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்டத்தில் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புகையில்லா போகி கொண்டாடுவோம் சுற்றுச் சூழலை பேணிக் காப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை மாநகர மக்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை..!

image

சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகும் முதலீட்டு விளம்பரங்கள் மீது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற ஏமாற்றுதல் ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 9, 2026

சிவகங்கை: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம் தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகை தொகையில் மட்டுமே இயக்கப்படவேண்டும். கூடுதலாக வாடகை வசூல் செய்யும் நெல் அறுவடை இயந்திரங்கள் குறித்து, விவசாயிகள் தங்களது புகார்களை குறிப்பிட்டுள்ள அலுவலர்களிடம் நேரிலோ அல்லது குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களின் வாயிலாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல்.

error: Content is protected !!