India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். (ஷேர் செய்யுங்கள்)

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறும் கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவதை கண்காணிக்கவும்; பள்ளிக் கல்வி முடித்து உயர் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம்: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலில் குறை இருந்தால் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். இந்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து பொங்களுக்கு முன்னரே முழுமையாக பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஏதாவது குறை இருந்தால் 04146223264 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே உள்ள கிளரியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (38). இவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் நேற்று முன்தினம் (ஜன.07) பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், “புதுவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நிலைய மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக டிக்கெட் கவுண்டர்களின் இடங்கள் ஜன.08 முதல் மாற்றப்படுகிறது. கவுசிக பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள புதிய கட்டடத்தில் முன்பதிவு கவுண்டர் செயல்படும். முன்பதிவு இல்லாத டிக்கெட் கவுண்டர் பாண்லே பால் பூத்துக்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளது.

வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாகராஜன் அரியூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிடம் கடந்த ஓராண்டுக்கு மேலாக காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம்: குயவன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் பவுனம்பாள் (70). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டாமல், அதே பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் நகைகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் விலை ரூ.5 லட்சமாகும். இதுகுறித்த புகாரில், மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திட்டக்குடியில் இருந்து கோழியூர் செல்லும் சாலையில் உள்ள விளைநிலத்தில் நேற்று 45 வயதுடைய ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த திட்டக்குடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் செவ்வேரி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி அருள்முருகன்(45) என்பது தெரியவந்தது. மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.