Tamilnadu

News January 9, 2026

நாகை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாகை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

தஞ்சாவூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தஞ்சை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

ஜன.22 முதல் சேலத்தில் விளையாட்டுத் திருவிழா!

image

தமிழக முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ்,”இது நம்ம திருவிழா” என்ற பெயரிலான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் வரும் ஜனவரி 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் ஜன.21-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்

News January 9, 2026

ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் இன்று (ஜன.9) மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்து வருகின்றன. இதில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

News January 9, 2026

புதுக்கோட்டை: பொங்கல் பரிசு – புகார் எண் அறிவித்த கலெக்டர்

image

புதுகையில் பொங்கல் பரிசு பெறுவதில் பிரச்னை ஏற்பட்டால் புகாரளிக்க எண்கள் வெளிடப்பட்டுள்ளது. தனி வட்டாட்சியாளர் 9445000312, ஆலங்குடி 9445000313, குளத்தூர் 9445000314, கந்தர்வகோட்டை 9445000315, திருமயம் 9445000316, அறந்தாங்கி 9445000317, ஆவுடையார் கோவில் 9445000318, இலுப்பூர் 9445000319, மணமேல்குடி 9445000320, பொன்னமராவதி 9445000404, கரம்பக்குடி 9445000405, விராலிமலை 9080487553. இதனை SHARE பண்ணுங்க!

News January 9, 2026

அழகர்கோவில் கோவிலுக்கு சாற்றப்பட்ட பரிவட்டங்கள் ஏலம்

image

அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இன்று 09.01.2026 திருக்கோவிலுக்கு வரப்பெற்ற அம்மன் மற்றும் அழகருக்கு சாற்றப்படும் பரிவட்டங்கள், சேலைகள் ஏலம் விடப்படும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. திருக்கோவில் வளாகத்தில் வரும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு ஏலத்தில் சொல்ல படும் பணத்தின் மதிப்பை விட கூடுதலாக கேட்டு பெற்றுகொள்வார்கள்.இதன் மூலம் வீட்டில் பெருமாள் அருள் கிடைப்பதாக ஐதீகம்.

News January 9, 2026

ராணிப்பேட்டை: ரோடு சரியில்லையா? NO WORRY!

image

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News January 9, 2026

செங்கை: ஒரே இரவில் 20 வாகனங்கள் சூறை

image

சிங்கப்பெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் நேற்றிரவு உடைத்து சேதப்படுத்தினர். மேலும், சில வாகனங்களின் பேட்டரிகளும் திருடப்பட்டுள்ளன. இந்தத் துணிகரச் சம்பவம் வாகன உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 9, 2026

மயிலாடுதுறை: கடலுக்குள் செல்ல தடை!

image

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

News January 9, 2026

குண்டடம் அருகே கார் விபத்து

image

குண்டடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மின்சார அலுவலக முன்பு பல்லடத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்று கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் இவ்விபத்து குறித்து குண்டடம் போலீசார் சம்பவம் இடத்துக்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!