India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டத்தில், தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகை தொகையில் மட்டுமே இயக்கப்படவேண்டும். கூடுதலாக வாடகை வசூல் செய்யும் நெல் அறுவடை இயந்திரங்கள் குறித்து, விவசாயிகள் தங்களது புகார்களை குறிப்பிட்டுள்ள அலுவலர்களிடம் நேரிலோ அல்லது குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களின் வாயிலாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி அறிவித்துள்ளார்.

நாகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஜன.10) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

முத்திரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செல்வகுமார். இவர், பிரியதர்ஷினி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோரை மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், மிகுந்த மன வருத்தத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய சூழலில், செல்வகுமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

குண்டடம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவர் ஈரோட்டில் வசித்து வந்த 24-வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உணவு வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இவ்வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

வடகாடு ஊராட்சி சாத்தன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி குணசேகரன் (60). இவர் நேற்று மாலை அவரது மோட்டார் சைக்கிளில் கொத்தமங்கலத்துக்கு சென்றுள்ளார். அப்போது, அம்புலி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், தாறுமாறாக சென்று சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன், தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் வசித்து வருபவா்கள் முகமது யாசின், ஹாசினா பானு. தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 2-வது குழந்தையான ஆலியா பிறந்து 22 நாட்களே ஆகின்றன. நேற்று முன்தினம், குழந்தைக்கு தாய் பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்த நிலையில், சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: சாமல்பட்டி அருகே உள்ள கூர்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி மண்ணம்மாள்(70). இவர், கூர்சம்பட்டியில் இருந்து பெருமாள்(55) என்பவரின் மொபட்டில் மத்தூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுக்க சென்றார். பணம் எடுத்துக் கொண்டு திரும்பிய போது, மொபட்டில் இருந்து தவறி விழுந்த மண்ணம்மாள் படுகாயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் பலனின்றி உயிரிழந்தார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ்(21), அன்பரசன்(23), சிவதாஸ்(44) ஆகியோரை கடந்த 2018ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கில் நேற்று முன் தினம் தங்கராஜிற்கு 7 ஆண்டு சிறை, ரூ.11 ஆயிரம் அபராதம், அன்பரசன் மற்றும் சிவதாஸ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை, ரூ.5,500 அபராதம் விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக துடியலூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.இத்தகவலின் பேரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த ஸ்ரீஹரி கார்த்திக் (33) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி ஜெயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் பீரோவில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் கண்டிக்கவே, மனமுடைந்த சிறுமி தன் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.