India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் சித்தர்கோயில் அருகே உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த திருநெல்வேலியை சேர்ந்த வர்ஷினி (22). இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான சக்திவேல்(40) என்பவரைக் காதலித்ததால், அவரது தந்தை வரதராஜன் ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்துள்ளார்.இந்தநிலையில் தந்தை வரதராஜனை பிடிக்க சேலம் போலீஸ் கமிஷனர் 4 தனிப்படை அமைத்துள்ளார்.

இடையம்பட்டியை சேர்ந்த சரசு (50), அனுமுத்து (35) இருவரும் அப்பகுதி பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் (ஜன.8) இரவு பணி முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, பால்னாங்குப்பம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரசு லாரி டயரில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அனுமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே சென்னாவரம் அசோக்குமார், வந்தவாசி வெங்கடேசன், முருகன் மற்றும் புன்னை கிராமத்தைச் சேர்ந்த சிவா ஆகியோர் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களைப் பிடித்து கத்திகளைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்-பெங்களூரு இடையே அமைந்துள்ள தருமபுரி வழியாக தினமும் 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 6 பயணிகள் ரெயில்கள் செல்கின்றன. தருமபுரி ரெயில்வே போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரெயில் தண்டவாளங்களை கடந்த போது ரெயிலில் அடிபட்டு 18 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

திருவலஞ்சுழி பைபாஸ் அருகே கடந்த 2024ம் ஆண்டு இருசக்கர வாகனம் பழுதடைந்து நின்ற நபரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளான நந்தகுமார், சிவகுமார், சரண் ஆகிய மூவருக்கும் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நாகை மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் அகிலாஸ் (37). கடந்த 2015-ல் லைசா என்ற பெண்ணை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அகிலாஸ் 2023-ல் ஒரு பெண்ணுடன் பழகி அவரையும் கொலை செய்தார். இந்த கொலை வழக்கிலும் ஜாமீனில் வந்த அகிலாஸ் 6 மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூரில் வைத்து அகிலாஸை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத போலி நிதி நிறுவனங்கள், ஏலச்சீட்டு நிறுவனங்கள், மனை வணிக நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் மேலச்சோத்துரணி, சக்கரக்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 94981-07562, 83000-38265 கைப்பேசி எண்களிலோ புகார் தெரிவிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜமுரளி தெரிவித்தார்.

வடமதுரை அருகே வெள்ளபொம்மன்பட்டியில் உள்ள தென்னை மட்டை கயிறு திரிக்கும் ஆலையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் இயந்திரங்கள் மற்றும் கயிறுகள் எரிந்து நாசமாயின. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஜன.13 அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இக்குறைகேட்பு முகாமில் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.