India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் முனியன் (38). இவருக்கு கீர்த்திகா (32) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். முனியனிடம், கீர்த்திகாவின் அண்ணன் மூர்த்தி ரூ.40,000 கடன் வாங்கியுள்ளார். ஆனால் 6 ஆண்டுகளாகியும் அவர் திருப்பி தராததால், விரக்தியடைந்த முனியன் தனது மனைவியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்திகா விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கட்டபெட்டு ஒன்னதலை இடையே, பங்களோரை சின்னிஸ் கட்டடம் அருகே சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தற்போது, இத்திருவிழாவில் திரளானோர் பங்கேற்கவுள்ளதால் இன்று (ஜன.10), நாளை (ஜன.11) மதுக்கடை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் பகுதியைச் சேர்ந்த சபரி (20), கடந்த 2 ஆண்டுகளாக 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்துள்ளனர். பின்னர், சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு 18 வயது நிரம்பாததை தொடர்ந்து போலீசாரிடம் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சபரி மீது போக்சோவில் வழக்குபதிந்துள்ளனர்.

பென்னாகரம், நாகனம்பட்டியை சேர்ந்தவர் குமார் (46). இவர் பெங்களூருவில் கூழ், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட சீசன் வியாபாரம் செய்து வந்துள்ளார். சமீபத்தில் பென்னாகரத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டு விசேஷத்துக்கு, குமார் குடும்பத்துடன் வந்திருந்தார். பென்னாகரம்-நாகனம்பட்டி ரோட்டில் குமார் பைக்கில் வந்த போது மற்றொரு டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த எட்டாம் தேதி, முதல் நாள் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளின் தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் எட்டாம் இடம் பிடித்துள்ளது.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி உண்ணாமலை (55) மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை விரக்தியில் உண்ணாமலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை MSME தொழில்நுட்ப வளர்ச்சி நிலைய விரிவாக்க மையத்தில் ஒரு மாத கால தையல் பயிற்சி, அலைபேசி பழுதுநீக்க இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. 8வது தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். போட்டோ, கல்விச்சான்றிதழ் நகலுடன் அணுக வேண்டிய முகவரி: MSME தொழில்நுட்ப வளர்ச்சி அலுவலக விரிவாக்க மையம், சிட்கோ தொழிற்பேட்டை 3வது நுழைவு வாயில், மாட்டுத்தாவணி, விவரங்களுக்கு 70100 41455 எண்ணில் அனுகலாம்.

நாமக்கல் அடுத்த செல்லப் பம்பட்டி மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (63). கட்டட மேஸ்திரியான இவரது பைக் நேற்று அதிகாலை திருடு போய் உள்ளது. இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வேட்டாம்பாடியைச் சேர்ந்த சாந்தகுமார் (29) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.

நெல்லை, பாலபாக்கிய நகரை சேர்ந்தவர் கேசவ ராஜா(32). இவர் கார் கம்பெனியில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பாதாம் (கீர்) ஜூஸை எடுத்து குடித்தார். இதனால் அவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நல குறைவு ஏற்பட்டது. பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். கேசவ ராஜா இறந்தது குறித்து நெல்லை போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.