India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி ஜெயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் பீரோவில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் கண்டிக்கவே, மனமுடைந்த சிறுமி தன் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களின் உயர் கல்வி உதவித்தொகை பெறும் 10,000 குழந்தைகளுக்கு, 40 பிரிவில் இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04329 220087 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரல்வாய்மொழி சாலமன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (43). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் ஜன.8 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.3 – ரூ.6 லட்சம் வரை மானியம் பெறலாம். வேளாண் சார்ந்த படிப்பு பயின்றவர்கள், அக்ரிஸ்நெட் (AGRISNET) என்ற இணையதளத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதட்டூர்பேட்டை அருகே உள்ள ஜங்கால்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புல்லட். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தினேஷ்(18). நேற்று (ஜன.09) அவருடைய இரண்டு சக்கர வாகனத்தில் திருத்தணி பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள ஈச்சந்தோப்பு அருகே வரும் போது நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்த அவர் பலியானார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் கடலூர் மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அருகே உள்ள மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு உதவும் வகையில் நடிகர் கார்த்தி தனது உழவன் அறக்கட்டளை சார்பில் 500 அடி நீளத்திற்கு வேலி அமைக்க 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.