Tamilnadu

News January 10, 2026

கிருஷ்ணகிரி: போக்சோ குற்றவாளி தற்கொலை!

image

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் சதீஷ்(30) கடந்த மாதம் 24ஆம் தேதி போக்சோ வழக்கில் இருந்து ஜாமீனில் வந்தார். இந்நிலையில், மன வருத்தத்தில் இருந்து வந்த அவர், ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் பின்புரம் உள்ள டாஸ்மாக் கடை அருகே கடந்த ஜன.1ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 10, 2026

காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

image

படப்பை அருகே 2 நாட்களுக்கு முன்பு மது குடித்து கொண்டிருந்த நண்பர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரில், பிரகாச்ஜ்(35), ராம்குமார்(28), முருகன்(24), அருண்(35), குபேந்திரன்(27), மேகநாதன்(30), விக்னேஷ்(25), சரத்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், விக்னேஷ் என்பவருக்கு தலையில்காயம் ஏற்பட்டுள்ளது.

News January 10, 2026

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று ஜன.10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

கடலூர்: பணிச்சுமையால் கோர்ட் ஊழியர் தற்கொலை

image

சிதம்பரம் பள்ளிப்படையை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரிதா (46). இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள கோர்ட்டில் ஆவண எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிதா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சரிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 10, 2026

கிளம்பாக்கத்தில் பரபரப்பு!

image

கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஊரப்பாக்கம் சிக்னலில் இன்று அதிகாலை 2 மணியளவில் பெரும் விபத்து நிகழ்ந்தது. முன்னால் சென்ற வாகனம் திடீரென நின்றதால், பின்னால் வந்த பாரம் ஏற்றிய லாரி பிரேக் பிடித்தது. அப்போது லாரியிலிருந்த இரும்பு கம்பிகள் சரிந்து, அருகில் வந்த கார் மீது விழுந்தன. உயிர் சேதம் ஏற்படவில்லை இருந்த போதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News January 10, 2026

கள்ளக்குறிச்சி: மதுபிரியர் விபரீத முடிவு – குடும்பம் தவிப்பு!

image

கள்ளக்குறிச்சி: புக்கிரவாரியைச் சேர்ந்த சீனுவாசன் (36), மங்களூருவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் ஊருக்கு வந்த அவர், தினமும் மது குடித்துவிட்டு மனைவி லட்சுமி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். வழக்கம்போல், நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்த அவர், நேராக அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 10, 2026

வேலூர்: அண்ணன் பல்லை உடைத்த தம்பி கைது!

image

வேலூர்: கந்தனேரி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் வடிவேல் (48), ஆனந்தவேல் (38). அண்ணன் தம்பியான இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஆனந்தவேல், அருகில் கிடந்த கல்லை எடுத்து அண்ணன் வடிவேலுவை சரமாரியாக தாக்கினார். இதில், வடிவேலின் பற்கள் உடைந்தன. இதுகுறித்த புகாரில் ஆனந்தவேல் கைது செய்யப்பட்டார்.

News January 10, 2026

விழுப்புரம்: கழிப்பறைக்கு சென்றவர் மர்ம பலி!

image

விழுப்புரம்: கக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 45). கூலித்தொழிலாளியான இவர், வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது, திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அய்யனாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அய்யனார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

சென்னை: வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலி!

image

சைதாப்பேட்டையைச் சேர்ந்த கவரேஷ் (19), செனாய் நகரிலுள்ள வாகனங்கள் சுத்தம் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று அவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாகனத்தைச் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சக ஊழியர் ரஞ்சித்குமாரையும் மின்சாரம் தாக்கியது. தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், கவரேஷின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

பெரம்பலூர்: கிணற்றில் மாணவர் சடமாக மீட்பு

image

செட்டிகுளம் குன்னமேடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (20). ஐ.டி.ஐ-க்கு சென்ற இவர், வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் தேடியுள்ளனர். இந்நிலையில், அவரது புத்தகப் பை மற்றும் செல்போன் செட்டிகுளத்தில் உள்ள கிணற்றின் அருகே கிடப்பதாக உறவினர்கள் தெரிவித்ததை அடுத்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் தேடினர். அதில், அன்பழகன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!