India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பக்கத்தில் இன்று ( மார்ச் 23 ) வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-யில் 100% வாக்குறுதியை உறுதி செய்வோம் என விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் 100% வாக்குறுதியை உறுதி செய்வோம் என கையெழுத்திட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அரசு பேருந்துகள் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் இன்று(மார்ச் 23) ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடு இயந்திரங்கள், மின்னனு வாக்குப்பதிவு மேலாண்மை அமைப்பு மூலம் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.23) ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் தேசிய,மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியினர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நேயம் மக்கள் கழகம் கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி உடன்படிக்கையின் படி, உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகள் நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை குறித்து நாளை மறுநாள்(மார்ச். 25) மாலை 3.00 மணி அளவில் கோவில்பட்டி ஸ்ரீ நவீரா பேலஸில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டதில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள மாநகர, ஒன்றிய, நகரபகுதி, பேரூர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த விவசாயி 6 நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.இந்நிலையில் நேற்று அந்த விவசாயியின் 23 வயது தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திருமாவளவன் போன்றோர் இதைப் பற்றி ஏன் பேசவில்லை? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பணியாற்றக் கூடிய வாக்குச்சாவடி அலுவலர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலர்களை தேர்வு செய்தார். வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி உடனிருந்தார்.

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு நிறுவனம், தனியார் நிறுவனம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, ஏப்ரல் 9ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 100% வாக்கு பதிவை உறுதி செய்யும் விதாமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக- ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களுக்கு நேற்று (மார்ச்.22) இரவு முதல் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை சிந்தாமணி பகுதியில் 2012-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்று திரும்பிய மணலூர், பிளியங்குளத்தைச் சேர்ந்தவர்களின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஜெயபாண்டியன், சுந்தரராஜன், வெற்றிவேல், ரஞ்சித், விஷ்னு, சிவா என 7 பேர் கொல்லப்பட்டனர். கரூட் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.