India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அபுமமுக) சார்பில், முதற்கட்டமாக 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். அதன்படி, இதில் நெட்டப்பாக்கம் (தனி) ஏ. சிலம்பரசன், வில்லியனூர் – நந்தகோபால், உழவர்கரை – எம். லாவண்யா மற்றும் இந்திரா நகர் – சி. ஜெயபால் (எ) செல்லத்தம்பி ஆகியோர் போட்டியிடுவர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மோதலால் அரசியல் கொடி, பேனர் மற்றும் வேட்பாளர் பிரச்சாரங்களுக்கு ஊர் பெரியவர்கள் தடை விதித்துள்ளனர். இக்கட்டுப்பாடு இன்றும் தொடர்கிறது. அரசியல் அடையாளங்கள் இல்லாவிட்டாலும், இக்கிராம மக்கள் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற கிராம் இருந்தால் கமெண்டில் சொல்லுங்க.

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் ராஜ்பவன் தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக மாநில பாஜக தலைவர் வி.பி ராமலிங்கம் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மார்ச்.25 அன்று நெல்லைக்கு வருகை தருகிறார். அதில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடன் என்ஜிஓ காலனியில் உள்ள தனியார் மஹாலில் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பின்னர் மாலை கோவில்பட்டி செல்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட புள்ளான்விடுதி கிராமத்தில் நேற்று (மார்ச் 22) “கள்” குடித்ததில் 9 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் சமூக வலைதளங்களில் 40 பேர் என வருகிறது. ஆகவே அதனை நம்ப வேண்டாம் என்றும், இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை ஒட்டி அனைவரும் 100% வாக்களிப்போம் என்பது குறித்த வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பதாகையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்தினசாமி கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு இளைஞர் அணியினர் செயலாற்றும் வகையில் நாளை மானாமதுரை சாலையில் உள்ள ராஹா பேலஸில் நடைபெறும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் (ம) துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சேலம் சூரமங்கலத்தில் ரம்ஜான் விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் ‘விசில்’ சின்னம் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன. இதனைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விதிமுறை மீறல் புகாரின் பேரில், தவெக நிர்வாகிகள் 3 பேர் மீது சூரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Sorry, no posts matched your criteria.