India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி, இன்று (25.03.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டார்.

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு காட்பாடி பகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் காவல் பார்வையாளர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி கவுஸ்துப் சர்மா நேற்று திடீர் ஆய்வு செய்தார். காட்பாடி அருகே அமைந்துள்ள மாநில எல்லை சோதனைச் சாவடியில் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறதா, விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தபால் ஓட்டு குளறுபடிகள் குறித்துப் புகார் அளித்தனர். அதில், போக்குவரத்து துறையில் தேர்தல் விதிமீறல்கள் நடப்பதாகவும், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மாவட்டத் தேர்தல் அலுவலர் பிருந்தாதேவியைச் சந்தித்து முறையிட வந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை எட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் அடையாளமான முட்டை கோழி தொழிலை முன்னிறுத்தி தேர்தல் விழிப்புணர்வு சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற செய்தி இதில் இடம்பெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024ல் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இந்நிலையில், அவர் நேற்று (மார்ச் 24), சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து பேசினார். தற்போது, அதிமுக கூட்டணியில், பொற்கொடிக்கு சென்னையில் உள்ள திருவிக நகர் தொகுதி ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை: மணியம்பட்டு ஏரியில் இன்று(மார்ச் 25) மாணவர்கள் நித்திஷ்(14), பார்த்திபன்(12), நிதிஷ்(14) ஆகிய 3 பேர் ஏரியில் குளிக்கச் சென்றனர். ஆழமான பகுதிக்கு 3 பேரும் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மானமதுரையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரத்தில் மதுரை ஐகோர்ட் கிளை மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு இழப்பீடு வழங்கியும் உடலை பெறாமல் இருப்பது ஏன்? இறந்தவர் உடலை வைத்து போராட்டம் நடத்துவது தற்போது Fashion ஆகிவிட்டது. மேலும், இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனக் கூறி ஐகோர்ட் கிளை மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதான நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. ஏப்ரல் 1 முதல் ஜூன் 14 வரை 5 கட்டங்களாக இந்த வகுப்புகள் நடக்கிறது. இதில் சேர விரும்புவோர் விளையாட்டு அரங்கில் நேரில் வந்து பதிவு செய்யலாம் என மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி (IAS), முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகடாமியின் (LBSNAA) துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 2023-2025 காலக்கட்டத்தில் கோவையில் பணியாற்றிய இவர், சிறந்த ஆட்சியர் மற்றும் சிறந்த தேர்தல் நடத்தும் அலுவலர் விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது மத்திய அரசுப் பணியின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அங்கு பணியாற்றுவார்.

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0423-24442777
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.