Tamilnadu

News April 1, 2026

திருமங்கலம்: அரிவாளால் வெட்டிக் கொலை

image

நெடுமதுரை மேலதெருவை சேர்ந்த அடைக்கலராஜ்(28) மகன் அஜய்யும்(4), அதே ஊரைச் சேர்ந்த மொக்கைச்சாமியின்(30) மகன் அபினேஷ்(4) விளையாடியபோது இருவரும் சட்டையிட்டதாக கூறப்படுகிறது. இதில் அடைக்கலராஜ் அபினேசை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அபினேஷ் தனது தந்தையிடம் அடைக்கலராஜ் தன்னை அடித்ததாக கூறியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மொக்கைச்சாமி அரிவாளால் அடைக்கலராஜை வெட்டிக் கொலை செய்தார்.

News April 1, 2026

ஈரோடு: 3 மாத குழந்தை உயிரிழப்பு

image

ஈரோட்டைச் சேர்ந்த சந்தோஷ் – ஆஷா தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது எதிர்பாராதவிதமாகப் புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாகக் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

News April 1, 2026

திண்டுக்கல்: டூவீலர் மோதி விவசாயி உயிரிழப்பு!

image

வடமதுரை அருகே பாடியூரை சேர்ந்தவர் அய்யாதுரை (65) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தாமரைப்பாடி டாஸ்மாக் பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாங்கரை அம்மா பட்டியை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்த டூவீலர் அய்யாதுரை மீது மோதி விபத்து. இதில் பலத்த காயம் அடைந்த அய்யாதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 1, 2026

திண்டாடும் ஆரணி மக்கள்!

image

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி பவருகிறது. இந்த நிலையில் ஆரணி அடுத்த நேத்தம்ப்பக்கம் கிராமத்தில், கேஸ் சிலிண்டர் புக் செய்து பல நாட்கள் ஆகியும் வராததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நேர்ந்தால் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் கிராமமக்களை எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News April 1, 2026

வேலூர்: துரைமுருகன் மீது பாய்ந்தது வழக்கு

image

அமைச்சர் துரைமுருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் சென்னையில் இருந்து ரயிலில் காட்பாடிக்கு வந்தார். அப்போது அவரை தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர். இதையடுத்து தேர்தல் விதிகளை மீறியதாக காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், கதிர்ஆனந்த் எம்.பி., உள்ளிட்ட 8 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 1, 2026

பெரம்பலூர்: தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்தல் செலவினப் பார்வையாளர் அனுஜ் கார்க், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் செலவினங்களை பராமரிப்பது தொடர்பான வங்கிக் கணக்குகள் வழங்கியுள்ளார்களா என்றும், தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 14 வகையான ஆவணங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்றும் பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

News April 1, 2026

அறிவித்தார் திருப்பூர் மாவட்ட கலெக்டர்! GOOD NEWS

image

திருப்பூர் மாவட்டத்தில் அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் வரும் மே 1 ம் தேதி வரை http://joinindianarmy.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம், என மாவட்ட ஆட்சியர் மணீஷ் தெரிவித்துள்ளார். இதில் ராணுவவீரர், மருந்தாளுனர், மகளீர் ராணுவ காவல், கிளார்க், ஸ்டோர்கீப்பர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

News April 1, 2026

கிருஷ்ணகிரி: தவெக-வினர் மீது பாய்ந்த வழக்கு!

image

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம், தவெக நகர செயலாளர் சசிக்குமார் (32) தலைமையில், தவெக-வினர் 50 பேர் கூடினர். கிருஷ்ணகிரி, தவெக வேட்பாளர் முகுந்த் ஆர்.பாண்டியனை வரவேற்று, பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தேர்தல் விதிமுறை மீறி, பொது இடத்தில் கூடியதாக சசிக்குமார் உள்பட, 50 பேர் மீது, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 1, 2026

புதுக்கோட்டை: பாஜக வழக்கறிஞர் மீது தாக்குதல்

image

விராலிமலை தெகுதியில் சுயேட்சையாக பாஜக முன்னாள் மாவட்ட பொதுசெயலாளர், மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில், நேற்று குடுமியான்மலை சிவன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது சில பாஜகவினர் சேர்ந்து சண்முகசுந்தரத்தை தாக்கினர். இதில் காயமடைந்த அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அன்னவாசல் போலீசார் விசாரனை செய்தனர்.

News April 1, 2026

புதுக்கோட்டை: பாஜக வழக்கறிஞர் மீது தாக்குதல்

image

விராலிமலை தெகுதியில் சுயேட்சையாக பாஜக முன்னாள் மாவட்ட பொதுசெயலாளர், மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில், நேற்று குடுமியான்மலை சிவன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது சில பாஜகவினர் சேர்ந்து சண்முகசுந்தரத்தை தாக்கினர். இதில் காயமடைந்த அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அன்னவாசல் போலீசார் விசாரனை செய்தனர்.

error: Content is protected !!
↑