Tamilnadu

News April 1, 2026

நீலகிரி: இதற்கு தடை உத்தரவு!

image

நீலகிரி, கோடை சீசனை முன்னிட்டு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சீசன் மாதங்களாக இருப்பதால் மாதங்களில் படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடைவிதிக்கும். இந்நிலையில் இன்று முதல் கோடை சீசன் துவங்குவதை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா உட்பட 8 பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2026

இராமநாதபுரம்: அஞ்சல் சேமிப்பு வங்கி பரிவர்த்தனை நிறுத்தம்

image

இராமநாதபுரம் அஞ்சல் கோட்டம் உட்பட்ட அனைத்து அஞ்சலகங்கலிலும் சேமிப்பு வங்கி பரிவர்த்தனைகள் மார்ச்.31 முதல் ஏப்.3 வரை நடைபெறாது. நிதியாண்டு இறுதி பணிகள் மற்றும் அரசு விடுமுறை காரணமாக இந்த தடை அமலில் உள்ளது. வைப்பு, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் கிடையாது. இருப்பினும் கடிதம், பார்சல் அனுப்புதல் மற்றும் விநியோகம் வழக்கம்போல நடைபெறும். ஏப்ரல் 4 முதல் அனைத்து சேவைகளும் இயல்பாக மீண்டும் தொடங்கும்.

News April 1, 2026

செங்கல்பட்டு: கோயிலுக்கு சென்று திரும்பியவர் பலி!

image

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே டீக்கடை நடத்தி வந்தவர் லோகநாதன்(56). இவர் செங்கல்பட்டு அடுத்த பழவேலி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது ஜி.எஸ்.டி., சாலையில் பழவேலி மூங்கில் அம்மன் கோவில் அருகே வந்தபோது, தாம்பரம் நோக்கி சென்ற கார் இவரது பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 1, 2026

முக்கூடல்: சாலையோர மரத்தில் லாரி மோதி விபத்து

image

கடையம் அருகே பெருமாள்நாடானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (28). லாரி டிரைவரான இவர் நேற்று முன் தினம் இரவில் முக்கூடல் – பொட்டல்புதூர் சாலையில் சென்ற போது திடீரென லாரியின் டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய லாரி சாலையோர குளிர்பான தள்ளுவண்டி கடையில் மோதி அங்குள்ள மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தி ஸ்டீபன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு.

விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

image

கண்டாச்சிபுரம் தாலுகா காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம்மாள்(80). சம்பவத்தன்று இவர், முகையூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சாலையைக் கடந்து செல்ல முயன்றார். அப்போது, அந்த வழியாக திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த வீரம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டையில் போலி டாக்டர் அதிரடி கைது!

image

பாணாவரம் அடுத்த மகேந்திரவாடியில் மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுகாதாரக் குழுவினர் நேற்று(மார்ச் 31) மகேந்திரவாடியில் உள்ள கிளினிக்கில் சோதனை செய்தனர். அப்போது, மேல்வீராணத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(61) என்பவர் +2 மட்டும் படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரிய வந்ததும் போலீசார் அவரை கைது செய்தனர்.

உத்திரமேரூர் அருகே 2 பேர் துடிதுடித்து பலி!

image

தி.மலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன்(80). இவரது மனைவி கோவிந்தம்மாள்(70). அவரது இளைய மருமகன் ராமன்(50). வரதன் தனது மனைவி கோவிந்தம்மாளை அழைத்துக்கொண்டு மதுராந்தகம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, உத்திரமேரூர் அருகே கார் டயர் வெடித்ததில், கார் பனைமரத்தில் மோதியது. இதில், வரதன், கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானனர்.

error: Content is protected !!
↑