Tamilnadu

News April 2, 2026

மதுரை: பாஜக நிர்வாகியின் குழந்தை நீரில் மூழ்கி பலி

image

மதுரை, அவனியாபுரம் அருகே காளிதாஸ்(பாஜக ஊடக பிரிவு) என்பவர் தனது ஜல்லிக்கட்டு காளையை குளிப்பாட்ட சென்றபோது மகனை முத்து தஷ்விக்(3) கூட்டிச் சென்ற நிலையில், பின்னர் அவசரத்தில் வீட்டிற்கு திரும்பியபோது குழந்தையை மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மனைவி தெரிவித்ததையடுத்து தேடியதில் ஊருணியில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2026

வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

image

திருப்பூர் வேட்டுவபாளையம் பத்மாவதி காம்பவுண்ட் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஆலம்கீர் உசேன் , ஷோஹல் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை 14,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

News April 2, 2026

கோவை அருகே இரட்டை கொலை.. பாய்ந்தது குண்டாஸ்

image

கோவை அருகே முன்விரோதம் காரணமாகப் பாட்டி மற்றும் பேத்தியைக் கொலை செய்த வழக்கில் கைதான அபிஷேக் (19) மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. எஸ்.பி கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை மற்றும் நிர்வாகம் இதன் மூலம் எச்சரித்துள்ளது.

News April 2, 2026

சேலம் அம்மாபேட்டையில் மாணவன் உயிரிழப்பு

image

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன் (17). இவர் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீச்சல் தெரியாத நிலையிலும் ஆர்வத்துடன் குதித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 2, 2026

பரமக்குடியில் மேலும் ஒரு புதிய வேட்பாளர் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வரும் தேர்தலில் வேட்பாளராக இரத்தின பிரகாஷ் பாண்டியன், என்பவர் போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இவர் தற்போது புதிய தமிழகம் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகின்றார், புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

News April 2, 2026

திருநெல்வேலி: மிரட்டலில் ஈடுபட்ட போலீஸ் SI சஸ்பெண்ட்

image

தாழையூத்து ஸ்டேஷன் எஸ்ஐ ராமநாதன், காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வீடுகட்ட எம் -சாண்ட் மணல் கேட்டு மிரட்டியதாக அப்பகுதி குவாரி உரிமையாளர் தரப்பில் மாவட்ட எஸ்பி பிரசன்னகுமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர், விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எஸ்ஐ ராமநாதன் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர்களை எஸ் பி பிரசன்ன குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்,

News April 2, 2026

தூத்துக்குடி: மாணவி பலி; இறுதி சடங்கு இல்லாமல் தகனம்

image

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மகள் செல்வ சுகாசினி(16) என்பவர் அப்பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியதற்கு சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார். இதனால் தொற்று ஏற்பட்டு மதுரையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல் மதுரையிலேயே தகனம் செய்யப்பட்டது.

News April 2, 2026

தூத்துக்குடி: மாணவி பலி; இறுதி சடங்கு இல்லாமல் தகனம்

image

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மகள் செல்வ சுகாசினி(16) என்பவர் அப்பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியதற்கு சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார். இதனால் தொற்று ஏற்பட்டு மதுரையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல் மதுரையிலேயே தகனம் செய்யப்பட்டது.

News April 2, 2026

வேலூரில் கொடூரத்தின் உச்சம்!

image

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (35), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கொடூரமாக பாலியல் கொன்கொடுமை செய்தார். இதுகுறித்து வழக்கு வேலூர் ‘போக்சோ’ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார்.

News April 2, 2026

நாகை: சாலை விபத்தில் இளைஞர் பரிதாப பலி

image

நாகை, வடக்கு நல்லியாந்தோட்டத்தை சேர்ந்தவர் காளிமுத்து(28). இவர் நேற்று நாகை – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் பனைமேடு பகுதியில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது நாகை நோக்கி வந்த அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பயிடத்திற்கு விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!
↑