India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை தி.நகரில் வாடகைக்கு இருந்த வீட்டை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியதாகவும் வீட்டு பெண் உரிமையாளரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக யு டியூபர் வராகி, பாண்டி பஜார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அவர் கடந்த மார்ச் 30ம் தேதி மீண்டும் சரணடையவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட செல்வராஜ் (42) என்பவர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (32), கார்த்திக் (35) 2 பேரும் நாகர்கோவிலில் துரித உணவு கடை நடத்தி வந்தனர். பங்குனி உத்திரத்தையொட்டி இருவரும் நேற்று முன்தினம் ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நெட்டூர் அருகே பைக் சென்ற போது தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு.

தூத்துக்குடி அருகே கீழ வைப்பார் பகுதியைச் சேர்ந்த ஜாய் விக்டோரியன் (32) என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் ஆர்.எம். காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், பொலிரோ காரில் வந்த சிலுவத்தூர் செல்வத்திடம் இருந்த உரிய ஆவணமில்லாத ரூ.54,900 பறிமுதல் செய்யப்பட்டது. இப்பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் மற்றும் துணை வட்டாட்சியர் பிரேம்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாகச் செலுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம், வி கே புரம் மீனாட்சிபுரம் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்,. இவர் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் தன் வீட்டில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததை கண்டு அதை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக சரவணக்குமார் உயிரிழந்தார்.

உரத்துப்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கார்த்திகேயனுக்கும், அவரது மனைவி வெள்ளையம்மாளுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வெள்ளையம்மாள் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கார்த்திகேயன் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகே துணிகள் வைத்திருப்போர் இல்லாதோருக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அக்ஷயா வாசல் என்ற நிலையம் திறக்கப்பட்டது. மன்னார்குடி நகராட்சி மற்றும் நேசக்கரம் பொதுநல அமைப்பு இதனை பராமரித்து பாதுகாத்து வந்தது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடையிலிருந்த துணிகள் எரிந்து சாம்பலானது. தற்போது இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.