Tamilnadu

News April 4, 2026

திருவாரூர்: துணி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

image

மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகே துணிகள் வைத்திருப்போர் இல்லாதோருக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அக்ஷயா வாசல் என்ற நிலையம் திறக்கப்பட்டது. மன்னார்குடி நகராட்சி மற்றும் நேசக்கரம் பொதுநல அமைப்பு இதனை பராமரித்து பாதுகாத்து வந்தது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடையிலிருந்த துணிகள் எரிந்து சாம்பலானது. தற்போது இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News April 4, 2026

புதுச்சேரி: தேர்தல் ஆணையம் விதித்த தடை

image

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6:30 மணி வரை கருத்துக்கணிப்புகளை நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது அச்சு ஊடகங்கள் (News papers) மற்றும் மின்னணு ஊடகங்கள் (TV, Social Media) என இரண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

News April 4, 2026

ஆண்டிபட்டி அருகே சிறுமி உயிரிழப்பு

image

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராகவன். இவரது மகள் சிவகாளஸ்திரி (6). நேற்றைய தினம் ராகவன் அவரது மகளுடன் சேர்ந்து மாட்டிற்கு புல் கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மாடு சிறுமியை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.

News April 4, 2026

திருப்பத்தூரில் உடல் தூக்கி வீசப்பட்டு கோர பலி

image

திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் மார்க்கத்தில் நேற்று (ஏப்.3) அதிகாலை 60-65 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 4, 2026

கோவை திமுக பெண் நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்!

image

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் பரப்புரையின் போது, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிஎல்ஏ 2 திவ்யா, அக்கட்சியிலிருந்து விலகி அஇஅதிமுகவில் இணைந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சால்வை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

News April 4, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது வழக்கு

image

விருத்தாசலம் அடுத்த எடச்சித்தூரை சேர்ந்தவர் முருகவேல்(27). இவர், 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முருகவேல் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.3) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
↑