Tamilnadu

News April 4, 2026

புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் ராசிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பரத். இவர் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் மாத்தூர் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் பரத்தை காப்பற்ற் முன்றும், முடியாமல் போனது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்ததன் பேரில், நாவல்பட்டு தியனைப்புத்துறையினர் பரத்தின் உடலை மீட்டனர்.

News April 4, 2026

விழுப்புரம் அருகே பயங்கர தகராறு!

image

ஆனாங்கூர் கிராமத்தில் முருகன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் நடனம் ஆடிய படி சென்றுள்ளனர். இதைப் பார்த்த ஆனாங்கூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஆறுசாமி(22) என்பவர், அவர்களிடம் சென்று நடனமாடக் கூடாது எனக் கூறியுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News April 4, 2026

திருவள்ளூரில் அதிரடி கைது!

image

திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் போலீசார் நேற்று(ஏப்.3) காந்திபுரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 5 பேர், போலீசாரைக் கண்டதும் ஓடினர். இதில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News April 4, 2026

வாலாஜாபாத்: ஒருவர் மீது குண்டாஸ்!

image

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் தாலுகா, குருவி மலை கிராமம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரத்(23). இவர் மீது மாகரல் போலீஸ் நிலையத்தில் 21 வழக்குகள் நிலுவலியில் உள்ளன. இந்நிலையில், அவரை கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பரத்தை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சினேகாவிற்கு பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

News April 4, 2026

ரிஷிவந்தியம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே உள்ள நூரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் மலேஷ். சமையல் தொழிலாளியான இவருக்கு கமலி(31) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். ஓட்டல் வேலைக்கு செல்லும் மலேஷ், சம்பள பணத்தை சரியாக மனைவியிடம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த கமலி விஷம் குடித்து மயங்கினார். சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.

News April 4, 2026

அரக்கோணம் வழியாக கோடைகால சிறப்பு ரயில்!

image

கோடைகால சிறப்பு ரயில் பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து ( 06545) சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் 9ஆம் தேதி பெங்களூர் கன்டோன்மென்டில் காலை 8.05 மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படுகிறது. அரக்கோணம் காட்பாடி வழியாக பெங்களூருக்கு செல்கிறது. இந்தத் தகவலை தெற்கு ரயில்வே நேற்று(ஏப்.3) தெரிவித்தது.

News April 4, 2026

நாசாவை திரும்பி பார்க்க வைத்த தி.மலை மாணவர்கள்!

image

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் நடத்திய விண்வெளி போட்டியில் உலக அளவில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள தனியார் டெக்னோ பள்ளி மாணவர்கள் 3-ஆம் பரிசு வென்று சாதனைபடைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற நிலையில் சபரி, கிரிஷ்ராம், ஜஸ்வந்த், லோகித்ராம் ஆகியோர் தேர்வாகி உலக அளவில் 3ஆம் பரிசு வென்று புருவம் தூக்க வைத்துள்ளனர்.

News April 4, 2026

அரியலூர் மாவட்டத்தில் வெப்ப நிலை அதிகரிப்பு!

image

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாத தொடக்கத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரையில் வெயில் பதிவானது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் பொதுமக்கள் பலரும் மதிய வேளையில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளே முடங்கினர்.

News April 4, 2026

வேலூரில் தடை; அறிவித்தார் ஆட்சியர்!

image

இந்திய தேர்தல் ஆணையம், ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணியிலிருந்து 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 4, 2026

திருச்சி: விளக்கு ஏற்றிய போது மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

image

திருச்சி கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் கோமளவள்ளி(63). இவர் தனது வீட்டில் விளக்கு ஏற்றும்போது, எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து, உடல் முழுவதும் பரவியது. இதனை கண்ட அவரது கணவர் மோகன் அக்கம்பத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, திருச்சி மருத்துவமனையில் அனுமதித்தார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!
↑