Tamilnadu

News April 11, 2026

புதுகை: பாஜக-வால் தமிழுக்கு மீண்டும் ஆபத்து – ஸ்டாலின்

image

புதுக்கோட்டையில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மற்றும் அடிமை அதிமுகவை வேரோடு வீழ்த்த வேண்டும் என தெரிவித்தார். மேலும், பாஜகவால் தமிழுக்கு மீண்டும் ஆபத்து வந்துள்ளது என குற்றம் சாட்டிய அவர், சாதனைகளை சொல்லி இபிஎஸ் ஓட்டு கேட்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

News April 11, 2026

குமரி: வீட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

image

புன்னதுவிளையை சேர்ந்தவர் அனிஜீவா(39). இவர் இண்டு குழந்தைகளுடன் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர் 9-ம் தேதி அதிகாலையில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றுள்ள நிலையில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 11, 2026

தஞ்சை: டெல்டா அம்மாவின் கோட்டை – டிடிவி தினகரன்

image

தஞ்சையில் பேசிய டிடிவி தினகரன், “டெல்டா என்றால் திமுகவின் கோட்டை என்கிறார். இது அம்மாவின் கோட்டை, இடையில் நாங்கள் கோட்டைவிட்டு விட்டோம். மீண்டும் இது அம்மாவின் கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். முதல்வர், அவரது மகன் உதயநிதி டெல்டாகாரன் என்கிறார்கள். அவர்கள் டெல்டா காரர்கள் அல்ல, உல்டா காரர்கள்” என்றார்.

News April 11, 2026

தஞ்சை: திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்-டிடிவி

image

தஞ்சையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றினார். அதில், “திமுக என்கிற தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என ஓர் அணியில் இணைந்துள்ளோம்” எனக் கூறினார். மேலும் தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது நிர்வாகிகளின் கடமை என்றார்.

News April 11, 2026

புதுக்கோட்டை திமுகவின் கோட்டை – மு.க.ஸ்டாலின்

image

புதுக்கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, புதுக்கோட்டையின் சிறப்புகளை பட்டியலிட்டு வாக்கு சேகரித்து பேசிய அவர், புதுக்கோட்டை திமுகவின் கோட்டை என தெரிவித்தார். மேலும், மொழிப்போர் தியாகிகளை தந்த மாவட்டம் புதுக்கோட்டை எனவும் கூறினார்.

News April 11, 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 மின்னணுவாக்கு பதிவு ஆய்வு

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு 07 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணுவாக்கு பதிவு இயந்திரத்திற்கான முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் இன்று (ஏப்.11)நடைபெற்றது.

News April 11, 2026

சென்னகுணம் : முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

image

முகையூர் ஒன்றியம் சென்னகுணம் கிராமத்தில் திருக்கோயிலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கௌதம சிகாமணி ஆதரித்து திரண்ட மக்கள் கூட்டம்,முன்னாள் அமைச்சர் பொன்முடி திமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.உடன் திமுக, விசிக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 11, 2026

ஆயுதப்படை கவாத்து பயிற்சி – எஸ்.பி. சிபின் ஆய்வு

image

இன்று (ஏப்.11) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவல்துறையினரின் அணிவகுப்பு, ஒழுக்கம் மற்றும் தயார்நிலையை மதிப்பீடு செய்து தேவையான அறிவுரைகள் வழங்கினார்.

News April 11, 2026

தேனி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவு

News April 11, 2026

தென்காசி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!
↑