India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதிக்கு உட்பட்ட பரவை மார்க்கெட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தோனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் பாலமுருகன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாதமல் எடுத்து சென்ற ரூ.1.94 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை தாசில்தார் அலுவலகம் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என்பது தெரியாத நிலையில், இது குறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் தற்போது அவரைப் பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கயம் பகுதியை சேர்ந்தவர் முரளி (28). இவர் நேற்று முன்தினம் இரவு, மனைவி காயத்ரியுடன் டூவீலரில் பெருமாள் மலை அருகே சென்றபோது எதிரே காங்கயம் நோக்கி வந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த இருவரும் காங்கயம் GH-க்கு அனுமத்தித்த போது, முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காயத்ரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை.

மதுரையை சேர்ந்த ரேவதி என்பவர் அரசனுாரில் செவிலியராகப் பணிபுரிகிறார். காலை பணி முடித்து விட்டு சிவகங்கை செல்வதற்காக அரசனுாரில் இருந்து அந்த வழியாக டூவீலரில் வந்தவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். பில்லுார் அருகே வரும்போது காட்டுப்பகுதியில் டூவீலரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி 2 கிராம் தங்க தோடு மற்றும் போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து மர்ம நபர் தப்பினார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரணை.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. குன்னம் தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களில், 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 414 கட்டுப்பாட்டு கருவிகளும், 438 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்களும் என மொத்தம் 1266 கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் வரும் ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவு அன்றும், அதற்கு முந்தைய நாளும் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, தனியார் அமைப்புகளோ மற்றும் தனிநபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு. ஊடக சான்றளிப்பு கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

குளச்சல் அருகே நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற 14 வயது மாணவன் ரியோபின் ரிட்ஜோ, ராட்சத அலையில் சிக்கி மாயமானார்; அவருடன் அலையில் இழுக்கப்பட்ட இருவரை மீனவர்கள் மீட்ட நிலையில், மாயமான மாணவனைத் தேடும் பணியில் கடலோரப் போலீசார் மற்றும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோத்தகிரி அரவேனு அருகே மூணு ரோடு வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்திற்கு நேற்று தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். அங்கு மனித எலும்புக்கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வனத் துறையினர் சென்று தனித்தனியாக கிடந்த எலும்புக்கூடுகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி GH-க்கு அனுப்பி வைத்தனர். பல கோணங்களில் போலீசார் விசாரத்து வருகின்றனர்.

நத்தம் அருகே வத்திபட்டி பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் (28). இவர் கடந்த 3-ந்தேதி டூவீலரில் பரளி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலரில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லெட்சுமணன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கந்தாம்பாளையம் பிரிவு அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் கணவனுடன் சென்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (40), என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.