India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி கோட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை.8.40க்கு செல்லும் திருச்சி – காரைக்கால் டெமு ரயில் இன்று முதல் வருகிற 18ஆம் தேதி ரத்து பகுதியாக செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டும் இயங்கும். மறுமார்க்கமாக காராஈக்கல் – திருச்சி ரயிலும் பகுதியாக ரத்து செய்யபடுமென திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, களக்குடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(19). இவர் உளுந்தூர்பேட்டையில் சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் ஒப்பந்த தொழிலாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விருத்தாச்சலம் அருகே கொட்டாரக்குப்பம் பகுதியிலிருந்து புலியூர் கிராமத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். அப்போது திடிரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கவிழ்ந்தது. இதில், மணிகண்டன் சம்ப இடத்திலே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்

கரூர் மாவட்டம், செங்கல் – தரகம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சஞ்சய்ராஜ் என்பவர், எதிர்பாராதவிதமாக ஆடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், உடல் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் GH-க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மண்டபம் பேரூர் குஞ்சார்வலசை, அருகே நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கபில் (தம்பி) கௌசல்யா (அக்கா) மற்றும் 4 வயது குழந்தையுடன் எரிபொருள் நிரப்பி விட்டு பெட்ரோல் பங்கை விட்டு வெளிய வந்த பைக் மீது, திடீர் என தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற மற்றொரு பைக் மோதியது. இதில் இரண்டு பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் ( ஆண் ) சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

கோவையில் முட்டை பொடிமாஸ் அளவு மற்றும் விலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பார் சப்ளையர் சுந்தர்ராஜ் அடித்துக் கொல்லப்பட்டார். மது போதையில் இருந்த பிரபு, மனோஜ் ஆகிய இளைஞர்கள் சப்ளையரின் நெஞ்சில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கந்தாம்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கணவனுடன் சென்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (40), கண்முன்னே தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை அரசரடி ஆபீசர் டவுனை சேர்ந்தவர் ஆண்டனி எல்விஸ் – சுமிலா தம்பதி. இவர்கள் மகள் ஆஸ்ரி (19), மகன் ஆஸ்டின் (8). காரில் திருச்சிக்கு சென்றனர். மேலூர் அருகே மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுமிலா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

மயிலாடுதுறை வேளாந்திடலை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி நீடூர் விஜி (எ) விஜயன். ரவுடியான இவரை பட்டாகத்தியை வைத்து மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்வதால் ஆட்சியர் உத்தரவின்படி விஜியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜி மீது 5 கொலை வழக்கு உட்பட16 வழக்குகள் உள்ளது.
Sorry, no posts matched your criteria.