India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட நகா்ப் பகுதிகளில் சமுதாய அமைப்பாளா்களாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படும் பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு வெளிச்சந்தை அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காரைக்காலில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்தடைந்து சென்னை செல்லும் 16176 என்ற எண் கொண்ட ரயில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எக்மோரில் 9 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வரும் 16175 என்ற எண் கொண்ட ரயில் தாம்பரத்தில் இருந்து 9.30 மணிக்கு புறப்படும் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகாராக பெற்றுக்கொண்டார். பின்னர் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அப்போது சாகர் கவாச் எனும் கடலோர பகுதியில் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு பாதுகாப்பு குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 போலீசாருக்கு வழங்கப்பட உள்ள ஒத்திகை பயிற்சி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாம்பரம் டு திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி டு தாம்பரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாம்பரத்தில் இன்று இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை மார்க்கமாக திருநெல்வேலி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை வழியாக சிறப்பு ரயில். தாம்பரத்தில் இருந்து இன்று (செப் 3) இரவு 10.25க்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருச்சி, மதுரை திருநெல்வேலி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுநாள் காலை 11 மணிக்கு நெல்லை வரும். மறு மார்கமாக நெல்லையில் இருந்து நாளை(செப் 4) இரவு 10.20க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25க்கு தாம்பரம் வந்து சேரும். இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள தென்னக ரயில்வே அறிவுறுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படும் நகர்ப்புற பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் பணியிடங்களுக்கு வெளிச்சந்தை அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டப்படிப்பு மற்றும் கணினி துறையில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். தொடர்ந்து தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2025-ஆம் ஆண்டிற்கான எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 2014க்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பங்களை www.rimc.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
குத்தாலம் அருகே மூவலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் – வளர்மதி தம்பதி. இருவரும் சொந்த வேலையாக வெளியூர் சென்ற நேரத்தில், இவர்களது வீட்டில் நேற்று பீரோவை உடைத்து மர்ம நபர்கள் 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.10 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.