Madurai

News February 28, 2026

மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மதுரை மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 28, 2026

FLASH: மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

image

நாளை (மார்ச்.01) பிரதமர் மோடி மதுரை வருகை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையம் பெருங்குடி சந்திப்பில் இருந்து அவனியாபுரம் – பைபாஸ் ரோடு, அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ரோடு வரை எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை. கப்பலூர் பாலம் வழியாக தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது. *SHARE பண்ணுங்க.

News February 28, 2026

மதுரை: பள்ளி சிறுமி தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை, வெள்ளலூர் அருகே குறிச்சிபட்டியை சேர்ந்த சிறுமி(12) குறிச்சிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் வளர்த்து வந்த பசு மாடு முட்டியதில் இவருக்கு காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் காயத்தின் வலி தாங்காமல் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News February 28, 2026

மதுரை: நாய் குறுக்கீடால் ஆட்டோ விபத்து; ஒருவர் பலி

image

திருப்பரங்குன்றம் கூத்தியார்குண்டை சேர்ந்தவர் நல்லுசாமி (47). இவர் நேற்று மதுரை – திருமங்கலம் சாலையில் ஷேர் ஆட்டோவை ஓட்டி சென்ற போது, பரம்புபட்டி அருகே ரோட்டின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. அதன் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக ஆட்டோவை சட்டென திருப்ப, நிலை குலைந்து ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த நல்லுசாமி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை.

News February 27, 2026

மதுரை: WhatsApp -ல் பில் கட்டலாம்… அரசின் புதிய அப்டேட்..!

image

மதுரை மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு. 9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும். பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 27, 2026

மதுரை: பைக், கார் பெயர் மாத்தனுமா?. இத பண்ணுங்க!

image

மதுரை மக்களே நீங்க செகண்ட்ஸ்-ல் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு<> க்ளிக் <<>>செய்யுங்க
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

News February 27, 2026

மதுரை: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

மதுரை மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI:  90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 27, 2026

மதுரை: வாக்காளர்கள் கவனத்திற்கு…!

image

மதுரை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News February 27, 2026

BIG BREAKING மதுரை: திமுகவில் இணைந்த உசிலம்பட்டி MLA

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் 2022ல் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டார். அதன்பின் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு என்று தனிபயணம் மேற்கொண்ட அவர் இன்று தனது மகன் முன்னாள் எம்.பி ரவீந்திரநாத், உசிலம்பட்டி MLA அய்யப்பன் மற்றும் ஆதரவாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

News February 27, 2026

மாநகராட்சி வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிறு செயல்படும்

image

மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சிக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், புதை சாக்கடை உள்ளிட்ட வரி வசூல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் எளிதாக வரி செலுத்த மாா்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!