India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை சிக்கந்தர் சாவடி பொற்கொடி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று கொடைக்கானலுக்கு சவாரி சென்று விட்டு திரும்பி வருகையில், வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் இவர் கார் மீது எதிரே வந்த பால் வேன் நேருக்கு நேராக மோதியது. இதில் ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தற்கொலை செய்துகொண்ட பக்தர் பூர்ண சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர், குடும்பச் சூழல் குறித்துக் கேட்டறிந்தார்.

மதுரையில் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியான பின் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் கூட்டணி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு இக்கட்டான சூழல் உள்ளது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. போதைப்பொருள் மற்றும் மதுபால் குடும்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா ஆச்சு எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்று பெண்கள் இப்போது நினைத்து பார்க்கிறார்கள். NDA கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் போதை கும்பல், ரவுடிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

திமுக அரசு தமிழ்நாட்டை கொள்ளை அடித்துள்ளது. எம்ஜிஆர்க்கு உற்றதுணையாக இருந்த மதுரையை திமுகவிறக்கு மதுரை வேப்பங்கோட்டையாக உள்ளது. தூய்மையான நகரம் வரிசையில் மதுரையை தரைமட்ட அளவுக்கு கொண்டு போனார்கள். லஞ்சத்தால் மதுரை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்தார். திமுகவிற்கு காசு மட்டும் தான் பிரச்சனை மக்களுக்கு என மோடி கூறினார்.

மதுரை மண்டலா நகரில் தேசிய ஜானநாயகி கூட்டணி மாநாட்டில் வெற்றிவேல் என உரையை தொடங்கிய மோடி பேசியதாவது: பூர்ண சந்திரன் என்னும்இளம் பக்தர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. பூர்ண சந்திரன் குடும்பத்தை சந்தித்து எனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்தேன். பூரண சந்திரன் உயிரிழப்பு சம்பவத்தில் உண்மை வெல்லும்.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என முதல்வர் அவதூறு பரப்பி வருகிறார். மக்களுக்கு எந்த திட்டமும் திமுக செய்யவில்லை ஆனால் திமுக குடும்ப உறுப்பினர்கள் மத்திய அமைச்சரானார்கள் கொள்ளையடித்தார். காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக கட்சி. எய்ம்ஸ் -ஐ முடக்க பார்த்தது திமுக அரசு, குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என தேசியஜனநாயக மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க குற்றசாட்டு.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு இருக்கிறதா என்று பயந்து கொண்டிருக்கும் ஆட்சியை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக ஆட்சியாளர அதிமுக தலைமையில் ஒன்று சேர்ந்துள்ளோம். உதயநிதி ஸ்டாலினுக்கு முடி சூட்டி விடலாம் என்று முதல்வர் கங்கனம் கட்டிக் கொண்டுள்ளார்.திமுக கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நாம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம் என்றார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த அவருக்குப் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கருவறையில் மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற பிரதமர், நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் மலை சுற்றுவட்டார பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
Sorry, no posts matched your criteria.