Madurai

News March 25, 2026

BIG BREAKING: மதுரை தெற்கு – இந்த முறை பாஜகவிற்கு! – EPS

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதில் மதுரை தெற்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மதுரை தெற்கில் அதிமுக போட்டியிட்ட நிலையில் தற்போது பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

News March 25, 2026

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நீச்சல் பயிற்சி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதான நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. ஏப்ரல் 1 முதல் ஜூன் 14 வரை 5 கட்டங்களாக இந்த வகுப்புகள் நடக்கிறது. இதில் சேர விரும்புவோர் விளையாட்டு அரங்கில் நேரில் வந்து பதிவு செய்யலாம் என மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.

News March 25, 2026

மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

மதுரை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 25, 2026

BREAKING: மதுரை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில், அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சற்று முன் அறிவித்தார். அதில்,

மதுரை மேற்கு – செல்லூர் K.ராஜு

திருமங்கலம் – ஆர்.பி.உதயகுமார்

திருப்பரங்குன்றம் – V.V. ராஜன் செல்லப்பா
ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 25, 2026

மதுரை: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

மதுரை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

மதுரை: 9 பேர் கொலையில் இன்று தண்டனை அறிவிப்பு

image

சிந்தாமணி பகுதியில் 2012-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்று திரும்பிய வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையின் போது 2 பேர் உயிரிழந்தனர். கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் நேற்று முன்தினம் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.

திருமங்கலம்: பெண்ணை கொன்று கல்குவாரியில் வீச்சு

image

கூடக்கோவில் அருகே பெரிய உலகாணியை சேர்ந்தவர் சரவணகுமார்(21). கொத்தனாரான இவருக்கும், சிவகங்கையை சேர்ந்த சரஸ்வதிக்கும்(55) திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கூடக்கோவிலுக்கு சரஸ்வதி வந்த போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் தாக்கியதில் சரஸ்வதி உயிரிழந்த நிலையில் அவரது உடலை சரவணக்குமார் கல்குவாரி தண்ணீரில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!