Madurai

News April 3, 2026

மதுரை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

மதுரை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING உசிலம்பட்டி: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏஒ.23 அன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதயடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் சரவணகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

News April 3, 2026

BIG BREAKING மதுரை: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், மதுரை தெற்கு தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், மதுரை தெற்கில் பாஜக சார்பில் ராமஸ்ரீனிவாசன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

மதுரை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News April 3, 2026

மதுரை: மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு விரும்புகின்றனர் – செல்லூர் ராஜு

image

மதுரை வடக்கு தொகுதியில் நேற்று தே.ஜ கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு விரும்புகிறார்கள் எனவே மதுரையில் 10 தொகுதியில் நாம் அமோக வெற்றி பெறுவோம் என்றார். டாக்டர் சரவணன் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்னும் ஒரே மாதத்தில் அதிமுக ஆட்சி மலர போகிறது. அதிமுக தேர்தல் அறிக்கை மணக் கும் மல்லிகையாக உள்ளது என்றார்.

News April 3, 2026

மதுரை: அரசு பஸ் – கார் மோதிய விபத்தில் சிக்கியவர் பலி.!

image

சோழவந்தான் அருகே கடந்த வாரம் அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சீனிவாசன் (52) என்பவர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சோழவந்தான் போலீசார், சீனிவாசன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 3, 2026

மதுரை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்.!

image

சுப்­பி­ர­ம­ணி­ய­பு­ரத்தை சேர்ந்­த­வர் செந்­தில்­நாதன் மகன் சுபாஷ்(23). இவர் பிளஸ் டூ வரை படித்­து­ விட்டு தனி­யார் நிறு­வ­னத்­தில் வேலை பார்த்­தார். வேறு வேலைக்கு முயற்சி செய்­ததால் பார்த்த வேலைக்கு செல்­ல­வில்லை. ஆனால் எதிர்­பார்த்த வேலையும் கிடைக்­கவில்லை. இத­னால் மன­மு­டைந்து நேற்று வீட்­டில் தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இதுகுறித்து ஜெய்­ஹிந்த்­பு­ரம் போலீ­சார் விசாரித்து வருகின்றனர்.

News April 3, 2026

மதுரை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்.!

image

சுப்­பி­ர­ம­ணி­ய­பு­ரத்தை சேர்ந்­த­வர் செந்­தில்­நாதன் மகன் சுபாஷ்(23). இவர் பிளஸ் டூ வரை படித்­து­ விட்டு தனி­யார் நிறு­வ­னத்­தில் வேலை பார்த்­தார். வேறு வேலைக்கு முயற்சி செய்­ததால் பார்த்த வேலைக்கு செல்­ல­வில்லை. ஆனால் எதிர்­பார்த்த வேலையும் கிடைக்­கவில்லை. இத­னால் மன­மு­டைந்து நேற்று வீட்­டில் தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இதுகுறித்து ஜெய்­ஹிந்த்­பு­ரம் போலீ­சார் விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2026

BIG BREAKING மதுரை காவல் ஆணையர் மாற்றம்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் IPS மற்றும் IAS அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மதுரை காவல் ஆணையர் லோகநாதன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மதுரை காவல் ஆணையராக அபிஷேக் தீச்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News April 2, 2026

மதுரை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT

error: Content is protected !!