Madurai

News April 2, 2026

மதுரை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

மதுரை மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in என்ற<<>> தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News April 2, 2026

மதுரை வடக்கில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்

image

மதுரை வடக்கு தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தங்கபாண்டி என்பவர் போட்டியிடுகிறார். இன்று (ஏப்.2) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். பின்னர்
ரேஸ்கோர்ஸ் மைதானம் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

News April 2, 2026

மதுரை: 9 போலீசாரின் தண்டனை விவரம் ஒத்திவைப்பு

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இதில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இன்று 9 போலீஸ்காரர்களுக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தண்டனை விபரம் ஏப்.6 அன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2026

மதுரை: தம்பதி தற்கொலை; உருக்கமான கடிதம்

image

மதுரை வெள்ளாளங்குன்றம் ஓட்டுநர் அருண் 28 மனைவி பிரியா 26 வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை, விபத்து ஒன்றில் கால்முறிந்த அருண் வீட்டில் இருந்தார், மனைவியும் தாயும் வேலைக்கு சென்றனர். குடும்ப கஷ்டத்தால் கணவன் மனைவி தற்கொலை செய்தனர். அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய போலீசாருக்கு கடிதம் எழுதி உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை: அதிமுக TO அஇபுதமமுக; MLA சீட் கிடைத்தது!

image

மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் க.பாலமுருகன். டாக்டரான இவர் அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர். சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் சென்னையில் சசிகலாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதன் பலனாக சோழவந்தான் தொகுதியின் அஇபுதமமுக வேட்பாளராக சசிகலா அறிவித்துள்ளார்.

மதுரை: பாஜக நிர்வாகியின் குழந்தை நீரில் மூழ்கி பலி

image

மதுரை, அவனியாபுரம் அருகே காளிதாஸ்(பாஜக ஊடக பிரிவு) என்பவர் தனது ஜல்லிக்கட்டு காளையை குளிப்பாட்ட சென்றபோது மகனை முத்து தஷ்விக்(3) கூட்டிச் சென்ற நிலையில், பின்னர் அவசரத்தில் வீட்டிற்கு திரும்பியபோது குழந்தையை மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மனைவி தெரிவித்ததையடுத்து தேடியதில் ஊருணியில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2026

மதுரை: லிப்ட் கொடுத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

திருப்புவனத்தை சேர்ந்த கண்ணன் மனைவி தமிழ் (31) கரூர் செல்வதற்காக மதுரை – ராமேஸ்வரம் சாலையில் பேருந்திற்காக காத்திருந்தார். அங்கு வந்த அவர் ஊரை சேர்ந்த ஷபிக் ராஜா (30) ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் விடுவதாக கூறி, டூவீலரில் லிப்ட் கொடுத்து அழைத்து சென்றார். எலைட் பள்ளி அருகே டூவீலரை சந்துக்குள் திருப்பி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிலைமான் போலீசார் ஷபிக் ராஜாவை இன்று கைது செய்தனர்.

News April 1, 2026

மதுரை: காலி இடம் இருக்கா.? அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!