Madurai

News January 7, 2026

மதுரை: ஜல்லிக்கட்டு விண்ணப்பம்.. கலெக்டர் அறிவிப்பு

image

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இன்று முதல் ஜனவரி 8ம் தேதி மாலை 5 மணிக்குள் <>madurai.nic.in<<>> – இந்த தளத்தில் கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE

News January 7, 2026

மதுரை: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீஸ் வேலை ரெடி!

image

மதுரை மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 7, 2026

மதுரை ஜல்லிக்கட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

image

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணி முதல் ஜனவரி 8ம் தேதி வரை மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய முடியும். மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களும், காளைகளும் தங்கள் முன்பதிவை இன்று மாலை 5 மணி முதல் விண்ணப்பத்தை தொடங்கலாம்.

News January 7, 2026

மதுரையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு திருவிழா

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் ஜனவரி 16, 17 உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளுக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் மற்றும் அலங்காநல்லூர் பாலமேடு கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News January 7, 2026

மதுரை: காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு..

image

பேரையூர் அருகே கொலவீரன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி கற்பகவல்லி (64). இவரை காணவில்லை என கல்லுப்பட்டி போலீசில் இரு தினங்களுக்கு முன்பு இவரது மகன் முத்து புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வில்லூர் கண்மாய் எதிரே உள்ள இந்திராணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் கற்பகவல்லி பிணமாக நேற்று முன்தினம் ( ஜன.5 ) மிதந்துள்ளார். உடலை மீட்டு பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

மதுரை: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

image

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கியாஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. காலாவதியான கியஸ் சிலிண்டர் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 7, 2026

மதுரை: வீட்டில் தனியாக இருந்த பெண் தற்கொலை

image

மதுரை அருகே ஆர்.வி.பட்டியை சேர்ந்­த­வர் செந்­தில் என்பவரது மனைவி கலை­யரசி (37). செந்­தில் திரு­விழா கடை­க­ளில் பேன்சி பொருள்­கள் விற்­பனை செய்து வரு­கி­றார். கலை­யரசி
மன­நிலை பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அதற்­கு சிகிச்­சை பெற்று வந்­துள்ளார். வீட்­டில் தனி­யாக இருந்­த அவர் நேற்று தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இச்சம்பவம் குறித்து திரு­ந­கர் போலீ­சார் விசா­ரிக்கின்றனர்.

News January 7, 2026

மதுரையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை மேலூர் அருகே தெற்குதெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் கணேசன் (24). திருமணமாகாத இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சில நாட்களாக மன அழுத்தத்தில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 7, 2026

மதுரைக்கு பொங்கல் பரிசாக ரூ.283 கோடி!

image

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 9,46,728 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 283 கோடியே 85 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE

News January 7, 2026

மதுரை: அரிய வகை நோயால் கன்றுக்குட்டி பாதிப்பு

image

மதுரை டாக்டர் தங்கராஜ் சாலையில் தென்மண்டல கால்நடைத்துறை அலுவலகமும், பன்னோக்கு கால்நடை மருத்துவமனையும் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2ம் தேதி பிறந்த கன்று குட்டி ஒன்றுக்கு பிறவியிலேயே ‘இக்தியோசிஸ் சுருக்கம்’ எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு அதன் உடல் நெருப்பில் கருகியது போன்று மாறியுள்ளதை கண்டு கால்நடைதுறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நவீன முறைப்படி கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

error: Content is protected !!