India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தீபம் ஏற்றலாம் என நீதிபதிகள் கேகே ராமகிருஷ்ணன், ஜெயசந்திரன் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையில் கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்னை திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றும் விவகாரம். இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி சேர்ந்தவர் முருகன் மகன் பால்பாண்டி (25). மது போதைக்கு அடிமையாக இருந்த இவரை, மது அருத்த விடாமல் அவரது பெற்றோர் தடுத்து வந்தனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், வடக்கம்பட்டியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளிக்குடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

மதுரை சோழவந்தான் அருகே எழுவம்பட்டி ஆறுமுகம் இவரது மகள் அனன்யா அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பும், மகன் சிவகார்த்திகேயன் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பும் படிக்கின்றனர். ஜன 2 ல் மாடியில் துணி காய போட சென்ற போது, வீட்டின் அருகே செல்லும் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அனன்யா சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை எல்லீஸ் நகர் சரவணன் 52 .அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கிறார். இவரது எல்லீஸ் நகர் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த ஹவுஸ் பாட்ஷா என்பவர் அத்துமீறி நுழைந்து ஒரு பகுதியை ஆக்கிரமித்ததாகவும், சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் வெளிநாட்டு வாழ் இந்தியர் செல் மூலம் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார். அதன் அடிப்படையில் ஹவுஸ் பாட்ஷா மீது, எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவனியாபுரம்,பாலமேடு,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள, உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 7ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி ஜனவரி 8ம் தேதி மாலை 5 மணிக்கு முன்பதிவு முடியும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தெரிவித்துள்ளார். மாடுபிடி வீரர்கள் இதை பயன்படுத்தி ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம்.

மதுரை மாவட்டத்தில் இன்று (05.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அதை மாற்ற…
1. இங்கு<
2. வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க.
3. சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும்.
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருச்சி மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.