India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, விரைவில் வெயில் காலம் வரப்போகிறது. அந்த சமயத்தில் வீட்டில் கரண்ட் இல்லை என்றால் நமது வீடே சமையலறை போன்று இருக்கும். அந்த சமயம் யாரை தொடர்பு கொள்வது என தெரியவில்லையா.? வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அவசர காலத்தில் 9498794987 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்தவர் டீ மாஸ்டர் பாபு (57). இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் வீட்டில் இருந்து 2 நாட்களாக வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது அழுகிய நிலையில் பாபு இறந்து கிடந்தார். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை சிம்மக்கலை சேர்ந்த பாலாஜி மனைவி பவித்ராவிற்கு (28), கடந்த 2 வருடமாக மூச்சு விடுதல் பிரச்சனை இருந்தது. இதற்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு நேற்று (ஜன.7) மயங்கி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் 15, 16, 17 தேதிகளில் நடைபெறும். பாலமேடு போட்டியை 16-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். இந்தாண்டு கார் பரிசுக்கு பதிலாக டிராக்டர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12, டிப்ளமோ, B.E படித்தவர்கள் ஜன.9க்குள் <

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.10 காலை 9 மணிக்கு வேலம்மாள் பொறியியல் கல்லூரி நடக்கிறது. முகாமில் 10ஆயிரம் வேலைகளுடன் 250க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் <

மதுரை மக்களே, தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ, அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். <

1.மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
2.போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
3.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
4.மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
5.மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.

மதுரை டாக்டர் தங்கராஜ் சாலையில் தென்மண்டல கால்நடைத்துறை அலுவலகமும், பன்னோக்கு கால்நடை மருத்துவமனையும் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2ம் தேதி பிறந்த கன்று குட்டி ஒன்றுக்கு பிறவியிலேயே ‘இக்தியோசிஸ் சுருக்கம்’ எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு அதன் உடல் நெருப்பில் கருகியது போன்று மாறியுள்ளதை கண்டு கால்நடைதுறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நவீன முறைப்படி கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

மதுரை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.