Madurai

News January 9, 2026

மதுரையில் இலவச தையல், மொபைல் பழுதுநீக்கப் பயிற்சி

image

மதுரை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி நிலைய விரிவாக்க மையத்தில் ஒரு மாத கால இலவச தையல் மற்றும் அலைபேசி பழுதுநீக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது. பெண்களுக்கான தையல் பயிற்சியில் கவுன், ஜாக்கெட், சுரிதார் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவுக்கு 70100 41455 எண்ணில் அழைக்கலாம்.

News January 9, 2026

மதுரை: வேலை கிடைக்காததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

image

ராம­நா­தபுரம் மாவட்டம் கீழக்­கரையை சேர்ந்­த­வர் கணே­சன் மகன் அபிதரன்(24). இவர் மதுரை ஒத்­தக்­க­டை­யில் பண்னை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். இதை­ விட சிறந்த வேலை தேடி வந்தார் ஆனால் கிடைக்­கவில்லை. இத­னால் மன­மு­டைந்து காணப்­பட்­டவர். திருமங்­க­லத்தில் லாட்ஜ் ஒன்றில் இன்று தூக்குப்­ போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து திருமங்க­லம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 9, 2026

மதுரை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News January 9, 2026

மதுரை ஜல்லிக்கட்டில் 12,000 காளைகள், 5000 வீரர்கள் பதிவு

image

மதுரையில் நடைபெறவுள்ள பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,000 காளைகள் மற்றும் 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் 12,000க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போட்டியின் அளவையும் அதிரடியான முன்னேற்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

News January 9, 2026

மதுரை: பொங்கல் பரிசு வாங்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து

image

அவனியா­புரம் பெரியசாமி மனைவி ராக்­கம்­மாள்(25) காய்­கறி கடையில் வேலை பார்த்தார். மனைவி மீது சந்­தே­கப்­பட்டு கணவர் தக­ராறு செய்ய அதில் கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு மனைவி சென்று விட்­டார். நேற்று செம்பூரணி ரோட்­டில் உள்ள ரேசன் கடைக்கு பொங்­கல் பரிசு வாங்க அவர் வர, அங்கு வந்து மனைவியை அழைத்து சென்று கத்தியால் சரமா­ரியாக குத்திய கணவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

News January 9, 2026

மதுரை: 11ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்; ஒருவர் கைது

image

மதுரை, பெத்­தா­னியாபுரத்தை சேர்ந்­த­வர் பால­கி­ருஷ்­ணன்(26). இவர் +1 படிக்கும் மாணவியை கோச்­ச­டை­யில் உள்ள கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்­டார். இதை அறிந்த திருப்­ப­ரங்குன்­றம் மகளிர் நல அலு­வ­லர் பத்­மா­ அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீ­சார் போக்சோ சட்­டத்தில் வழக்கு பதிவு செய்து பால­கிருஷ்­ணனை நேற்று கைது செய்­த­னர்.

News January 8, 2026

மதுரையில் இறைச்சி விற்க தடை; மீறினால்..!

image

மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும், திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ம் தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

News January 8, 2026

மதுரை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <>கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

மதுரை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

மதுரையில் இறைச்சி விற்க தடை

image

மதுரையில் திருவள்ளுவர் தினமான 16ஆம் தேதி மாநகரில் இறைச்சி விற்க தடை அறிவிப்பு இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ஆம் தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

error: Content is protected !!