India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

மதுரையை சேர்ந்த ஜோசப் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோர் டூவீலரில் மடப்புரம் வந்துள்ளனர். அப்போது, எதிரே தேனியை சேர்ந்த யோகேஷ்வரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஜோசப், பாலமணிகண்டன், யோகேஷ்வரன், பூமா ஆகியோர் படுகாயமடைந்து மதுரை G.H-ல் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள்<

அழகர்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மேல்நிலைத் தொட்டி கீழே, சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அ.வலையப்பட்டி விஏஓ விக்னேஷ் அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். அப்பன்திருப்பதி போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் ? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று ஜன.10 அல்லது நாளை ஜன. 11 முதல் கோரிப்பாளையம் சாலையை மீனாட்சி கல்லூரி சந்திப்பில் உள்ள பாலத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக மீனாட்சி கல்லூரி நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புற ம் திரும்பி சர்வீஸ் சாலை பாலம் வழியாக ஏவி மேம்பாலம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுரை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் சதீஷ்(32). எம்பிஏ படித்த இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காளீஸ்வரி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். சதீஷுக்கு நுரையீரல் கேன்சர் இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். மா.சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை MSME தொழில்நுட்ப வளர்ச்சி நிலைய விரிவாக்க மையத்தில் ஒரு மாத கால தையல் பயிற்சி, அலைபேசி பழுதுநீக்க இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. 8வது தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். போட்டோ, கல்விச்சான்றிதழ் நகலுடன் அணுக வேண்டிய முகவரி: MSME தொழில்நுட்ப வளர்ச்சி அலுவலக விரிவாக்க மையம், சிட்கோ தொழிற்பேட்டை 3வது நுழைவு வாயில், மாட்டுத்தாவணி, விவரங்களுக்கு 70100 41455 எண்ணில் அனுகலாம்.

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் போல வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 8th முதல் பட்டதாரி வரை, கல்விச் சான்றிதழ், சுயவிவரம், ஆதார் ஆட்டையுடன் வர மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் போல வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 8th முதல் பட்டதாரி வரை, கல்விச் சான்றிதழ், சுயவிவரம், ஆதார் ஆட்டையுடன் வர மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.