India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இங்கே <

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று (ஜன.16) நடைபெற்று வரும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டில், 7 வது சுற்று நடைபெற்று வரும் நிலையில், 24 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக பாலமேடு ஜல்லிக்கட்டில், 489 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ள நிலையில், 465 பேர் தகுதி பெற்றுள்ளனர். மீதமுள்ள 24 பேர் குறைந்த, அதிகளவு BMI, உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு<

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் காண உள்ளனர். களத்தில் விளையாட உள்ள வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முழு உடல் தகுதியுள்ள வீரர்கள் மட்டுமே தேர்வு செய்து விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இதுவரை 100 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யபட்டுள்ள நிலையில் 10 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகளை, தீரமுடன் தழுவி அதிக காளைகளை தழுவும் வீரருக்கு முதல் பரிசாக ஒரு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட உள்ளது. களத்தில் நின்று விளையாடி , பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.

சிவகங்கை காளையார்கோவிலில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்றை டிரைவர் கிருஷ்ணன்(24) ஓட்டி வந்தார். மற்றொருபுறம் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த ஜான்சன் அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இரு பஸ்களும் திண்டுக்கல் சாலையில் துவரிமான் அருகே நேற்று ஒன்றின் பின் ஒன்றாக மோதியது. இதில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த விஜய மாணிக்கம் உட்பட 5 பேர் காயமடைந்த நிலையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

மதுரை மாநகரில் இன்று (15.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் 6வது சுற்று முடிவடைந்து 7வது சுற்று தொடங்கியுள்ளது. 6வது சுற்று முடிவில் 15 மாட்டின் உரிமையாளர்கள், 23 மாடுபிடிவீரர்கள், காயமடைந்துள்ளனர். 6வது சுற்று முடிவில் 44 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 நபர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.