India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் அன்பன் என்பவரின் பெயரில் காளை அவிழ்க்கப்பட்டது. காளையின் உரிமையாளர் தவெகவின் கட்சி கொடியை காண்பித்துள்ளார். கமிட்டி சார்பில் எச்சரிக்கப்பட்டும், அச்செயலை மேற்கொண்டதன் காரணமாக வெற்றி பெற்ற காளைக்கு பரிசு நிராகரிப்பட்டது. கமிட்டி அதனை “கேள்விக்குறி மாட்டிற்கு பரிசு இல்லை” என அறிவித்தனர்.

மதுரை மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாத்தனும் (அ) வேறு எண் சேர்க்கனுமா?
1. <
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்.
தகவல்களுக்கு : 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. SHARE பண்ணுங்க.

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை காண தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தபோது 2 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சிறந்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கால்நடைத்துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், அலங்காநல்லூரில் ரூ.2 கோடி செலவில் காளைகளுக்கான உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த ராமராஜ் (65), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் பணியை முடித்து பைக்கில் வீட்டுக்கு வந்தபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராமராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

அலங்காநல்லூரில் இன்று (ஜன.17) நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வரவுள்ளார். அதனைத் தொடர்ந்து 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை திறந்து வைக்க சாலை மார்க்கமாக செல்கிறார். பின் மதியம் 2 மணிக்கு மீண்டும் விமானநிலையம் வந்து அங்கிருந்து சென்னை செல்கிறார்.

மதுரை மாநகரில் இன்று (16.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதியாக அஜித் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் தலா 16 மாடுகள் பிடித்த நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது. தற்போது முதல் பரிசுக்கு அஜித் தேர்ந்தெடுக்கப்பட்டு காரினை வென்றுள்ளார். பிரபாகரன் 2ம் பரிசு பைக்கினை வென்றுள்ளார்.

உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது. 1000 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதியாக அஜித் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் தலா 16 மாடுகள் பிடித்த நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர் யார் என்ற பதற்றம் தற்போது அதீத தீவிரமாக பரவி வருகிறது.
Sorry, no posts matched your criteria.