India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், மாடுபிடி வீரர் கார்த்திக் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு ஜல்லிக்கட்டிலும் முதற்பரிசு வென்ற இவர், இந்த ஆண்டு சீறிப்பாய்ந்த காளைகளை லாவகமாகப் பிடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்தவர் வீரமுத்து (54). டிப்பர் லாரி டிரைவரான இவர் லாரியில் இருந்த சரக்கை இறக்கி விட்டு, பின்பகுதியை தூக்கி வைத்தபடி அதை இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி மெக்கானிசம் பழுதாகி சட்டென கீழே இறங்க அதில் தலை சிக்கி டிரைவர் வீரமுத்து பலியானார். இதுக்குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை.

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் முதல் சுற்றில் மஞ்சள் பனியன் அணிந்து வீரர்கள் களமிறங்கினர். முதல் சுற்று 8.30 மணிக்கு முடிவடைந்தது. இதில் 5 மாட்டின் உரிமையாளர்கள், 6 மாடுபிடிவீரர்கள் என மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதில் தேனியை சேர்ந்த அஜய் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

திருமங்கலம் தும்மக்குண்டடை சேர்ந்தவர் மனோஜ் என்ற மனோகரன்(55). இவருக்கும் இவரது மகன் சக்கரவர்த்திக்கும் (32), தும்மக்குண்டில் உள்ள இடத்தில் விவசாயம் செய்வது குறித்தும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சக்கரவர்த்தி தான் வைத்திருந்த அரிவாளால் தந்தையின் கழுத்து காலில் வெட்ட அவர் உயிரிழந்தார். தும்மக்குண்டு விஏஓ முருகன் அளித்த புகாரில் சிந்துபட்டி போலீசார் அவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

மதுரை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் நாளை ஜன.15-க்கு பிறகு இங்கு <

மதுரை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <

மதுரை, மேலூர் பஸ் நிலையம் வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் இன்று காலை இறந்து கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் பஸ்சுக்காக காத்திருந்தவரா ? எந்த ஊர் என தெரியவில்லை. அடையாளம் தெரியாத அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் மேலூர் காவல் நிலையத்தை அணுகவும் என போலீசார் தகவல்.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், முத்துப்பட்டி வழியாக மருத்துவ பரிசோதனையில் காளை கொம்பின் உயரம், காளைகளுக்கு போதை வஸ்துக்கள் கொடுக்கபட்டுள்ளதா என ஆய்வுக்கு பின்னர் டோக்கன் எண்கள் வரிசைப்படி போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். நாளை ஜல்லிக்கட்டு போட்டியில் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என மாநகர காவல்துறை அறிவிப்பு.

திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்த பாஜக முத்த தலைவர் எச் ராஜா மீது விசிக தலைவர் திருமாவளவனை விசிக பெயரையும் மிகவும் அவதூறாக ஒருமையில் பேசியதை தொடர்ந்து, விசிக திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையரிடம் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.