Madurai

News January 19, 2026

மதுரை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

மதுரை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

மதுரை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

News January 19, 2026

மதுரை: பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

image

எழுமலை உத்தபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா(73). இவரது பிள்ளைகள் திருமணம் ஆகி சென்று விட்டதால், இவர் தனித்து வசித்து வந்தார். இவருக்கு சில வருடங்களாக மூட்டு வலி இருந்ததால், நடக்க சிரமப்பட்ட நிலையில், இதனால் மனம் வெறுத்த இவர் பூச்சி மருந்தை குடித்து நேற்று முன்தினம் மயங்கி வீட்டில் கிடந்தார். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு பலியானார். இது பற்றி எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 19, 2026

மதுரை: தவறான வீடியோ பதிவிட்டால் கடும் நடவடிக்கை

image

தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி மதுரையில் அளித்த பேட்டியில், தேனி மதுராபுரி அருகே கர்நாடக பக்தர்கள் வேன் மீது லாரி மோதிய சாதாரண விபத்தை, மாநில மோதலாக சித்தரித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தவறான வீடியோக்களைப் பதிவிடுவோர் மீது வழக்குப் பதியப்படும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.

News January 19, 2026

மதுரை இனி Gpay, Phonepe, Paytm தேவையில்லை!

image

மதுரை மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம்.SHARE பண்ணுங்க..

News January 19, 2026

மதுரை: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

image

செக்கானூரணியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் கவியரசன்(16), நேற்று முன்தினம் அவர்களது தோட்டத்து வீட்டில் உள்ள ஃபேனை போட முயன்றுள்ளார். ஃபேன் வயர் அறுந்து கிடக்க அதை சரி செய்ய முயன்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு அளிக்கப்பட்டு, உசிலம்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு அவர் பலியானார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 19, 2026

மதுரை: பொங்கல் பண்டிகை 500 க்கும் மேற்பட்டோர் கைது

image

தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், ஆபரேஷன் டிராக் நெட் மூலம் 1,100 பிணையில் வரமுடியாத பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டன. மதுரை மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 90 வாரண்டுகள் செயல்படுத்தப்பட்டன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஜனவரி 9 முதல் 16 வரை 598 பேர் கைது செய்யப்பட்டனர்.

News January 18, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (18.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 18, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (18.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 18, 2026

மதுரை: உங்க CERTIFICATE தொலைந்து விட்டதா.? APPLY…

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், <>”E-பெட்டகம்”<<>> என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க

error: Content is protected !!