Madurai

News January 18, 2026

மதுரை: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

image

மதுரை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில்<> CLICK <<>>செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

News January 18, 2026

மதுரை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

மதுரை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 18, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு GOOD NEWS

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ கசிவு, கொரோனா காரணமாக 2021-ல் கும்பாபிஷேகம் நடைபெற வில்லை. வீரவசந்தராயர் மண்டபத்தில் சீரமைப்பு பணிகள் 90% முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிப்.2-வது வாரத்திற்குள் தேதியை அறிவிக்க அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

News January 18, 2026

மதுரை: இருதரப்பினர் மோதலால் சாலை மறியல்

image

சோழவந்தான் மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் இரு தரப்பினர் பொங்கல் விழா நடத்தினர். இதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் தெரிவித்தும் போலீசார் வர தாமதமானதாக கூறி பெண்கள் உட்பட பலர் குருவித்துறை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

News January 18, 2026

மதுரை: நாளை மின்தடை அறிவிப்பு

image

மதுரை அரசரடி, ஆரப்பாளையம் துணைமின் நிலையங்களில் நாளை(ஜன.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இத்துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் இதற்கு ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது. SHARE IT

News January 18, 2026

மதுரை: 10th போதும்., மத்திய அரசு வேலை ரெடி!

image

மதுரை மக்களே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 50 வயதுக்குட்பட்ட 10th, 12th, ITI, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 30க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். இதற்கு சம்பளம் ரூ.19,900 – ரு.78,800 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

News January 18, 2026

சமயநல்லூர் அருகே விபத்தில் 20 பேர் காயம்

image

சமயநல்லூர் அருகே மூலக்குறிச்சியை சேர்ந்த உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பாலமாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண சென்றனர். பின்னர் சரக்கு வாகனத்தில் ஊர் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செல்லனகவுண்டன்பட்டி ஆற்றுக்கால்வய் கரையில் கவிந்தது. இதில் சிறுவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்த நிலையில் அதில் படுகாயமடைந்த 11 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News January 18, 2026

மதுரை: பச்சிளம் குழந்தை உயிரிழந்த சோகம்

image

பேரையூர் அருகே சின்னகட்டளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி ஆனந்தமரி. 6 மாத கர்ப்பிணியான இவர் எதிர்பாராமல் பினாயிலை குடித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 2 நாட்களான நிலையில் நேற்று உயிரிழந்தது. இது குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

மதுரை: வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு.!

image

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News January 17, 2026

மதுரை: வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு.!

image

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

error: Content is protected !!