India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலைநகரை சேர்ந்த தொழிலாளி ரவிச்சந்திரன் (55), நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டில் புகுந்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கொலைக்கான காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை.

மதுரை, வண்டியூர் யாகப்பா நகரை சேர்ந்த வினோத்குமார் (32). சிறுமி ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வந்துள்ளார். இந்த தகவல் கிழக்கு ஒன்றிய ஊர்நல அலுவலர் அமுதாவுக்கு தெரியவர அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, போலீசார் போக்சோ சட்டத்தில் வினோத்தை நேற்று கைது செய்தனர்.

மதுரை கோ.புதூரை சேர்ந்த வேல்முருகன் மகன் பாரத் (20), 17 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் கோ.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற போது சிறுமி 5 மாத கர்ப்பம் என தெரிந்தது. மதுரை மேற்கு ஊர் நல அலுவலர் பாலஜோதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் பாரத்தை இன்று கைது செய்தனர்.

தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, பிப்.12 அன்று மதுரையில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதுகுறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜன.22-இல் மதுரையில் நடந்தது. இச்சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என இக்கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.

திருவனந்தபுரம் முதல் தாம்பரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் புதிதாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த, அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் மதுரை வழியாக தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலில்11 பொது பெட்டிகள் உட்பட 21 பெட்டிகள் இடம் பெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘இது நம்ம ஆட்டம் 2026’ல் கலந்து கொள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் பங்கு பெற ஆன்லைன் மூலம் பதிவு செய்ய நாளை (ஜன. 23) கடைசி நாள். தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதளம் http://cmyouthfestival.sdat.in, www.sdat.tn.gov.in இணையத்தில் பதிவு செய்யலாம்.

மதுரை மக்களே, மத்திய அரசு E-வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <

மதுரை மக்களே, மத்திய அரசு E-வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <

மதுரை வில்லாபுரம் மாரியப்பபிள்ளை தெருவை சேர்ந்தவர் தேவதாஸ், இவரது மகன் விஜயகுமார் (39) ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஏக்கத்தில் மனக்கவலையில் இருந்து வந்ததாக தெரிகிறது, இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.