India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

திருப்பரங்குன்றம் அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி மீனாட்சி . நேற்று இவரது மகன் கொப்பையன் டூவீலரில் பின்னால் அமர்ந்து திருமங்கலம் சாலையில் சென்றுள்ளார். அப்போது கற்பகநகர் வேகத் தடையில் டூவீலர் ஏறி இறங்கிய போது, மீனாட்சி தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுக்குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் உள்ள 16 வார்டுகளில், 45,000-க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகளுக்கு முகாம் நடத்த ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் முகாம்கள் நடைபெற்றது. விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்திய அன்றே இணைப்பு வழங்கப்படுவதால், இணைப்புகளுக்கு பல ஆயிரம் கூடுதல் வசூல் தடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மதுரை மக்களே, உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <

மதுரை மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு, பிளான் வேலிடிட்டி மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம்.SHARE பண்ணுங்க..

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கிராம வளர்ச்சி திட்டம், தொகுதி மேம்பாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் கிராமத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம்.

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இளைஞரின் குடும்பத்தினர், இதய தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இளைஞர் இதயம் உடலில் இருந்து எடுக்கப்பட்டது. காலை 9 மணிக்கு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புறப்ப்பட்டு தஞ்சாவூருக்கு 2 மணி நேரத்தில் இதயம் கொண்டு செல்லப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ் (26). இவருக்கு வரும் 28ம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் திருமணத்திற்காக பத்திரிக்கை வைத்துவிட்டு பேரையூர் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த டிராவல்ஸ் வேன் இவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.