India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேலூர் – சிவகங்கை சாலையில், மலம்பட்டி அருகே கணேஷ் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் பின்புறம் பயன்படுத்தப்படாத பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். அங்கிருந்து துர்நாற்றம் வீசவே அருகில் சென்ற பார்த்த போது நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்த ஜீப் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. அவர் யார் ? எப்போது இங்கு வந்தார் ? என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலாந்தூர் கே.ஜே காலனியை சேர்ந்தவர் சத்தியம்மாள்(71). இவர் நேற்று செல்லம்பட்டி சாலையில் ரோட்டோரம் நடந்து சென்ற போது, ஜோதிமாணிக்கம் பாலம் அருகே பின்னால் வந்த பள்ளி வேன் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில் வேன் டிரைவர் ஹரி கிருஷ்ணனை (59) கைது செய்து வாலாந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 1,598 கடைகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 7,620 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, கேள்வி நேரத்தில் மதுரைக்கு தெப்பக்குளம், விரகனூர் மற்றும் மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் எ.வ.வேலு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பாலம் அமைக்க ஆய்வு பணிகள் முடிந்து அடுத்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். (இது குறித்து உங்கள் கருத்து)

மேலூர், வெள்ளரிப்பட்டி முன்னமலைபட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன்(48), நேற்று முன்தினம் இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக நடைபெற்ற இக்கொலை தொடர்பாக மேலூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த விஜய் சுந்தர்(29) அவரது நண்பர்கள் பிரசாந்த், கணேஷ் குமார் என்ற கருப்புசாமி, ஆண்டிச்சாமி, அஜித் குமார், ஆகிய 5 பேரை நேற்றிரவு கைது செய்தனர். பின் மேலூர் ஜேஎம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <

மதுரை புறநகர், மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டாம் பகுதியை சேர்ந்த அதிமுக உரிமை மீட்பு குழு வடக்கு ஒன்றிய செயலாளர் பாரதி தலைமையில் சுமார் 25 நபர்கள், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.