Kanyakumari

News February 26, 2026

குமரி: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

image

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

News February 26, 2026

குமரி : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

News February 26, 2026

குமரி: IT ஊழியரிடம் பல லட்சம் மோசடி; இளைஞர் கைது

image

நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் பெங்களூரில் IT கம்பெனியில் பணியாற்றி வந்தார். 2025 ஜுன் 17அன்று ஒரு WhatsApp குழுவில் இணையும்படி வந்த லிங்கில் அவர் இணைந்து அதில் உள்ளவர்கள் கூறியபடி பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரை சேர்ந்த யாஸ்வர்தன் குமார் (19) என்ற இளைஞரை நேற்று கைது செய்தனர்.

News February 26, 2026

குமரி: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

image

பொட்டல்குளத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (31). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ராஜேஸ்வரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 26, 2026

குமரி: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

image

பொட்டல்குளத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (31). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ராஜேஸ்வரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 25, 2026

குமரி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<> eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 25, 2026

BREAKING குமரியில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளை முன்னிட்டு மார்ச்.4 அன்றும், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவை முன்னிட்டு மார்.10 அன்றும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஈடாக மார்ச்.7 மற்றும் மார்ச்.14 வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News February 25, 2026

குமரி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

குமரியில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்

image

குமரியில் ரூ.1785 கோடியில் முதல்வர் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. களியாக்காவிளை – குமரி சாலையில் ரூ.9 கோடியில் சாலைகள் அகலப்படுத்தப்படும்.

2. முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம் ரூ.2 கோடியில் பழமை மாறாமல் புனரமைப்பு.

3. மீனவர் நலவாரியம் மூலம் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

News February 25, 2026

BREAKING: குமரி மக்களுக்கு முதல்வர் புதிய அறிவிப்பு

image

குமரியில் ரூ.1,785 கோடியில் நலத்திட்ட பணிகளை முதல்வர் தொடங்கி வைத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. குமரி நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய பழையாற்றில் இருந்து கூடுதல் நீர் வழங்க ரூ.28.20 கோடியில் புதிய திட்டம்.

2. முக்கடல் சங்கமிக்கும் குமரியில் ரூ.25 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.

3. குளச்சல், மண்டைக்காடு பகுதியில் AVM கால்வாய் ரூ.1.20 கோடியில் புனரமைப்பு.

error: Content is protected !!