Kanyakumari

News January 1, 2026

குமரி: Driving Licence-க்கு முக்கிய Update!

image

குமரி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இங்கு கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 1, 2026

குமரி அருகே இளைஞர் அடித்துக் கொலை

image

கன்னியாகுமரி அருகே சுண்டன் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (34). இவர் செப்டிக் டேங்க் கிளீனிங் செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இவர் வீட்டில் இருந்து வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. லீபுரம் கடற்கரையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது உடலை கன்னியாகுமரி போலீசார் கைப்பற்றி, அடித்து கொலை செய்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 1, 2026

குமரி: பாலத்தில் இருந்து தவறி விழுந்த கவுன்சிலர் பலி

image

மாங்காவிளையை சேர்ந்த ஸ்டாலின் (50) உண்ணாமலை கடை பேரூராட்சி 7ம் வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். இவர் டிச.17ம் தேதி இரவு வீட்டு அருகில் உள்ள பாலத்தில் அமர்ந்திருந்த போது எதிர்பாராதவிதமாக 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (டிச.31) உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

News January 1, 2026

குமரி மக்களே., இனி பத்திரப்பதிவு சுலபம்!

image

குமரி மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இங்கு <>CLICK <<>>செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க..

News January 1, 2026

குமரி: 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்!

image

கொல்லங்கோடு 16 வயது + 1 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானவர் பாறசாலையைச் சேர்ந்த கப்பல் என்ஜினியராக பணிபுரியும் விஜேஷ் (20). கொல்லங்கோட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்த விஜேஷ், மாணவியை அங்கு அழைத்து திருமண ஆசை கூறி பாலியல் வன்புணர்வு செய்தார். இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து நேற்று குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் விஜேஷ் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

News January 1, 2026

குமரி: திடீரென நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை!

image

நெல்லை மாவட்டம் துறை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜசுரேகா (20) இவர் டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். கற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த இவர் மருத்துவமனை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறனர்.

error: Content is protected !!